20 October 2018

பேயாழ்வார்

பேயாழ்வார்  அவதார திருநட்சித்திரம் இன்று  (20.10.2018)


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...






  பேயாழ்வார் வாழி திருநாமம்!


திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே

மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே .....!





பிறந்த ஊர் -  மயிலாப்பூர்

பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)

கிழமை    -வியாழன்

எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி

பாடல்கள் -100

சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)



(2282)
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு

மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*

என்னாழி வண்ணன்பா லின்று






(2283)
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை

மருக்கண்டு கொண்டேன் மனம்.




(2284)
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்

தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்

செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,

வருநரகம் தீர்க்கும் மருந்து.






(2285)
மருந்தும் பொருளும் அமுதமும் தானே,

திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்

நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,

அன்றுலகம் தாயோன் அடி.






(2286)
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,

படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்

ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே

ஆராழி கொண்டாற் கழகு.











முதல் மூவர் 


பேயாழ்வார் வைபவம்  போன வருட பதிவு


திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....

பேயாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்

அனுபிரேம்...

3 comments:

  1. அழகிய படங்களுடன் ஆழ்வர் தரிசனம்..

    பேயாழ்வார் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
  2. பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியை (2282-2381) ஆகஸ்டு 2018இல் நிறைவு செய்து, அதில் சில பாடல்களை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். இன்று உங்கள் பதிவில் பொய்கையாழ்வாரைக் கண்டதில் மகிழ்ச்சி. நான் மேற்கோள் காட்டிய அதே பாடலை (2284) உங்களுடைய இப்பதிவில் கண்டேன்.

    ReplyDelete
  3. நல்லதொரு தகவலை தெரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete