30 October 2018

பரங்கி காய் பால் கூட்டு..

வாழ்க நலம்..


இன்றைய பதிவு  பரங்கி காய் பால் கூட்டு..







எங்கள் ப்ளாக் கில் திங்கக்கிழமை ரெசிபியில்..  பறங்கி கொட்டை பால் கூட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின்  ரெஸிப்பி  வந்தது...



பரங்கி காயில் கூட்டு, புளி கூட்டு,  குழம்பு எல்லாம் செய்தாலும் இப்படி செய்தது இல்லை..

அதில் சில மாற்றங்களுடன் இன்றைய  சமையல் ..

தேவையானவை

பறங்கி காய்     -   2 கீத்து
உப்பு                       -   ஒரு சிட்டிகை
வெல்லம்              - 3 ஸ்பூன்   
பால்                          - 3 ஸ்பூன்   





தாளிக்க:

எண்ணெய்          -  ஒரு  ஸ்பூன்

கடுகு                       - சிறிது
உ.பருப்பு               - சிறிது 
சிவப்பு மிளகாய்   - 1



செய்முறை



பரங்கி காயை  சிறிய  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது நீர், உப்பு  சேர்த்து  வேக வைக்கவும்.




காய் நன்றாக வெந்ததும் ...

அதில் வெல்லம் , பால் சேர்த்து கிளறவும்.






ஒரு கொதி வரவும் இறக்கி , பின் தாளித்து சேர்க்க பரங்கி காய் பால் கூட்டு தயார் .




நல்ல சுவையான ரெசிப்பி..இனிப்பு என்றாலும் தெவிட்டாத உணவு...

மிகவும் அருமையாக இருந்தது.


அன்புடன்
அனுபிரேம்



7 comments:

  1. பரங்கி காய் பால் கூட்டு பார்க்கவே அழகு.
    சுவையும் நன்றாக இருக்கும்.
    பாரதியார் பாடலும், படமும் அருமை.

    ReplyDelete
  2. பார்க்க நன்றாக இருக்கிறது. செய்து பார்க்கத் தோன்றுகிறது. முயற்சி செய்த பின் சொல்கிறேன்.

    ReplyDelete
  3. செய்வோமே... நாங்களும் செய்வோமே... ஆனா என்ன, எப்பவோ சின்ன வயசுல சாப்பிட்டது!

    ReplyDelete
  4. அழகு, அருமையாகச் செய்திருக்கிறீங்க.. இன்னும் கொஞ்சம் பால் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies

    1. ரொம்ப பால் சேர்த்தா கொஞ்சம் நீர்த மாதரி ஆக்கிடும் அதிரா...
      அதான் பார்த்து பார்த்து சேர்த்தேன்...இதுக்கு சரியாவே இருந்தது..

      Delete
  5. இதை விரைவில் முயற்சிக்கிறேன். என் பெண் 'நல்லா இருக்கு' என்று சொன்னால் இங்கு தெரிவிக்கிறேன். (எனக்கு அது சந்தேகம்தான். எனக்குப் பிடிக்கும்னுதான் தோணுது)

    ReplyDelete