28 October 2018

KRP அணை,கிருஷ்ணகிரி

வாழ்க வளமுடன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை இந்த KRP அணை.







செல்லும் வழியில்



இது கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

 இந்த அணை 1958இல் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது.






இங்கு அழகிய பூங்காவும் உள்ளது.

இதன் கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள்.

 நீர்ப் பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதியானது 3652 எக்டேர் நிலமாகும்.






கிருஷ்ணகிரி பகுதியானது அவ்வப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது.

தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் முலம் எடுத்து தங்கள் வயல்களில் விவசாயம் செய்தனர்.

ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர், இதனால் அப்போதைய காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினரான சு. நாராஜ மணியகாரர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை போதிய நிதி இல்லை என மறுக்கப்பட்டது.

 பின்னர் காமராசர் முதலமைச்சரான பிறகு அணை கட்ட சம்மதித்தார் என்றாலும் நிதிக்கு என்ன செய்வது என ராஜாஜியுடன் ஆலோசித்தபோது அவர் மத்திய அரசு வறட்சிக்காக நிதிவழங்கும் திட்டம் உள்ளது அந்த நிதியில் இருந்து அணையைக் கட்டலாம் என யோசனைத் தெரிவித்தார்.

அணை கட்டும்பணி 1955 சனவரி 3 இல் தொடங்கியது 1957 நவம்பர் 3 ஆம் தேதி பாசனத்துக்கு காமராசரால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
















பூங்கா காட்சிகள் அடுத்த பதிவில் தொடரும்..



அன்புடன்

அனுபிரேம்




3 comments:

  1. ஃ போட்டோக்கள் அருமையாக வந்துள்ளன

    ReplyDelete
  2. கிருஷ்ணகிரி அணை படங்கள் அனைத்தும் அழகு.
    பார்த்தது இல்லை.
    பார்க்க ஆவல்.
    அதியமானும் ஒளவையும் படம் அருமை.

    ReplyDelete