18 October 2018

பொய்கையாழ்வார்

இன்று( 18 . 1௦ .2௦18)  பொய்கையாழ்வார் அவதார தினம் .....

ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர்

இவர்.....









பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே......  !




பொய்கையாழ்வார்  

பிறந்த ஊர்             - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம்நூற்றாண்டு

நட்சத்திரம்     -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை               - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு                - திருமாலின் சங்கின் அம்சம்




ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி



(2082)


வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.







(2083)
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,

ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று

தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.



(2084)
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்

பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,

நீயளவு கண்ட நெறி.








(2085)
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து

பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்

ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,

ஆலமமர் கண்டத் தரன்.



(2086)
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று.






பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..


பொய்கையாழ்வார் வைபவம்   போன வருட பதிவு ..




அன்புடன்

அனுபிரேம்...



2 comments:

  1. அருமையான பதிவு.

    பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ஓம் நமோ நாராயணா.

    ReplyDelete
  2. பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதியை (2082-2181) ஜனவரி 2018இல் நிறைவு செய்து, அதில் சில பாடல்களை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். இன்று உங்கள் பதிவில் பொய்கையாழ்வாரைக் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete