30 October 2017

பேயாழ்வார்..



பேயாழ்வார்  அவதார தினம் இன்று  (30.10.2017)


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...


 இவர்  தம்மை மறந்த நிலையில்,

பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடி, பாடி..,என

 எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு  பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தால்...

  இவரை  பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர்....














  பேயாழ்வார் வாழி திருநாமம்!

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே

மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே


பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே .....!




முதலாழ்வார்கள் மூவருள் மூன்றாம் இடம் வகிப்பவர் ...

 பேயாழ்வார்


திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமாக ..


சித்தார்த்தி ஆண்டு,  ஐப்பசி திங்கள்,  வளர்பிறை தசமி திதி, வியாழக்கிழமை சதய நட்சத்திரத்தில்


மயிலாப்பூரில் ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில்


செவ்வரளிப்பூவில்  பேயாழ்வார் அவதரித்தார்.












கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார்.

நீதி நூல்கள், அறநூல்கள், மதநூல்கள், பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார்.


நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார்.


அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.


பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.


நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார்.

பேயாழ்வார் தொண்டை மண்டலத்து திவ்யதேசங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார்.

தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார்.

இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார்.

திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது


மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.


எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.


அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.


தரிசனம் தொடரும்.....





2282


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று.



2380

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

தாள் முதலே நங்கட்குச் சார்வு.



2381

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு.





பேயாழ்வார் திருவடிகளே சரணம்..!.




பொய்கையாழ்வர்  தரிசனம்...


பூதத்தாழ்வார்  தரிசனம்.......



அன்புடன்

அனுபிரேம்

5 comments:

  1. பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே!..
    பேயாழ்வார் திருவடிகள் சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  2. அழகிய படங்கள். தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. பேயாழ்வார் திருவடிகளே சரணம். சரணம்!

    அழகான படங்கள், அருமையான செய்திகள்.
    வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் அருமை...
    அழகு,

    ReplyDelete