20 September 2018

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..


ஓம் நமோ நாராயணா






தசாவதார மற்றும்  ஆழ்வார்கள்  மண்டபங்கள்-

மலைப் பாதையில் வழி நெடுகிலும் தசாவதார மண்டபங்கள் உள்ளன. இவற்றில், திருமாலின் தசாவதாரங்களை சிலா ரூபத்தில் வடித்து வைத்துள்ளனர்.

மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய ஒன்பது அவதார மண்டபங்களைக் கடந்ததும், ஹயக்ரீவர் மண்டபம் வருகிறது.கல்கி அவதாரம் இனிமேல் நிகழப்போகிறது என்பதால் இந்த மாற்று ஏற்பாடு.

 ஹயக்ரீவர் கல்விக்குரிய தெய்வம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.










மைசூர் கோபுரம்


தசாவதார மண்டபங்களுக்கு  பின் பன்னிரண்டு ஆழ்வார்களின் மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த தசாவதார மண்டபங்களையும், ஆழ்வார் மண்டபங்களையும் முழுமையாகக் கடந்து முடிக்கும் போது நாம் திருமலையின் உச்சியில் இருப்போம்.

ஆழ்வார்களைப் பற்றிய குறிப்பும், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய விபரமும் அந்தந்த மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன





தலையேறு குண்டு: 

பாத மண்டபத்தை அடுத்துள்ள பகுதி தலையேறு குண்டு பாறை. இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தைப் பார்க்கலாம். இவரிடம் தலைபதித்து வணங்கினால், திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சென்று வரலாம் என்று நம்பிக்கை. இதுபோல் தலையேறு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் மூன்று இடங்களில் அமைந்துள்ளன.


















திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் - ஸ்வாமி மலையப்பன் ஹம்ச வாகனத்தில்











திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் காலை - ஸ்வாமி மலையப்பன் யோக நரசிம்மர் திருக்கோலத்தில் சிம்ம வாகனம் கண்டருளல்




678.   
ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*
தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.



தொடரும்....


திருமலை வேங்கடவன் தரிசனம் 1



அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. புதுப் புது சாமிப்பெயரெல்லாம் சொல்றீங்க:).. படங்கள் அழகு.. தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.

    ReplyDelete
  2. மலையப்பனை தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு நன்றி.
    படிவழியே போனது இல்லை. அந்த வழியில் உள்ள படங்கள் அழகு.

    ReplyDelete
  3. நடைப்பயணம் நன்று. புகைப்படங்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி. பிரம்மோற்சவத்தினை டிவியில் பார்க்கிறேன். ரெம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  5. அருமையான கோயில் உலா. அலுப்பு தட்டாமல் உங்களோடு பயணித்ததுபோல இருந்தது.

    ReplyDelete
  6. நடந்து போனீங்களா?! எனக்கு இப்படி போக ஆசை. இதுவரை போனதில்லை. இனி வாய்ப்பு கிடைக்குமான்னும் தெரில. வயசாகிடுச்சுல்ல!

    ReplyDelete