04 September 2018

ஆலிலை கண்ணா...

ஆலிலையில்  கண்ணன்:









மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின்மீது சயனம் கொண்டிருக்ரும் காட்சி என்றும் நமக்கு பிடிக்கும்.

கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை.



மார்க்கண்டேய  முனிவருக்கு, தன் மாயசக்தியைக் காட்டுவதற்காக பிரளயத்தை (உலகம் அழிவது போன்ற தோற்றம்) ஏற்படுத்தினார்.

 அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார்.

 அப்போது உலகசிருஷ்டி அனைத்தும் குழந்தை பாலகிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது.

ஆலிலைக் கண்ணனை "முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் "முகுந்தன்' என பெயர் வந்தது  .






தாமரைப் பூப்போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி  சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும்.




""சாப்பிடுவது பிரம்மம். சாப்பிடப்படுவது பிரம்மம். சாப்பாடு போடுவதும் பிரம்மம்,'' என்றொரு மந்திரம் உண்டு.

அந்த மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணனே இந்த மாயாலீலையைச் செய்து  மகிழ்ந்ததாகச் சொல்வார்கள்.



 போன வருடம் ஸ்ரீரெங்கத்தில் ஏகாதசி விழாவின் போது,  ஆண்டாள் சன்னதி அருகே வரையப்பட்டு இருந்தவை இப்படங்கள்...

அத்துனை அழகு ஆனாலும் கூட்ட நெருசலில் இவ்வளவே தான் எடுக்க முடிந்தது...



திருக்கடல்மல்லை ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்





48

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
தூமணி வண்ணனே தாலேலோ



திருமார்புக்குப் பொருத்தமான ஐம்படை, முத்துவடம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து குற்றமில்லாத கொடைத்தன்மையுடைய குபேரன் உன்னைத் தொழுது நிற்கின்றான். ஆகையால் உன்னைத் தாலாட்டி மகிழ்கின்றேன். நீலமணி வடிவை ஒத்தவனே உன்னைத் தாலாட்டி மகிழ்கின்றேன்.

ஓம் நமோ வெங்கடேசாய.

- பெரியாழ்வார் திருமொழி.


அன்புடன்
அனுபிரேம்



15 comments:

  1. படங்களும், பாடல் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  2. ஆலிலை கண்ணன் அம்சமோ அம்சம்

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  4. வருணருக்கும் அவரது மகனான பிருகு முனிவருக்கும் இடையில் நிகழும் உரையாடல்களாக தைத்திரீயோபநிஷத்தில் குறிப்பிட்டுள்ளதே நீங்கள் சுட்டி காட்டிய மந்திரம்.

    ப்ரஹ்மன் எது எனும் தேடலில் பிருகு முனிவரைத் தவத்தின் மூலம் உணர்ந்து கொள்ளும்படி அவர் தந்தை பணிக்கிறார்.

    தவத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றாக இறைவனாக உணர்கிறார்.

    உணவு, மூச்சு, மனம், புத்தி இறுதியாக ஆனந்தமே ப்ரஹ்மன் என உணர்கிறார்.

    மிக அருமையான உபநிடதம்.

    நீங்கள் எழுதிய வார்த்தைகள் திரும்பவும் உபநிடத்தை வாசிக்க வைத்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விரிவான கருத்திற்கு மிகவும் நன்றி ஐயா..

      வருணருக்கும் அவரது மகனான பிருகு முனிவருக்கும் இடையில் நிகழும் உரையாடல் களை ..அப்பா கூற அனுபவித்துள்ளேன்..

      இருப்பினும் ஏதும் முழுமையாக தெரியாது...தற்பொழுது தான் தேடி தேடி சிறிது சிறிதாக அறிகிறேன்..

      Delete
  5. ஆலிலைக் கண்ணன் - வண்ணக் கோலத்தில் அழகு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  6. Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete
  7. சித்திரக் கோலங்களுடன்
    ஸ்ரீ கிருஷ்ணனின் கோலங்களையும்
    பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி...

    ஓம் ஹரி ஓம்!...

    ReplyDelete
  8. அழகான படங்கள் அனு சகோ/அனு மிகவும் ரசித்தோம்...

    ReplyDelete