27 September 2018

முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..

ஓம் நமோ நாராயணா






நமக்கு வழிகாட்டியாய்  ..பலம் தரும் ஆஞ்சநேயர்..


.













இனி நமது பயணம் மலை பாதையிலிருந்து..சாலை வழியாக



அடர்ந்த சேஷாத்ரி மலை






முழங்கால் முறிச்சான்:

இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு மிட்டா' என்னும் இடம் வருகிறது.

இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார்.

அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான்' என்ற பெயர் ஏற்பட்டது.

தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா' என்கிறார்கள்.

அவ்விடத்தில் சுவாமி  ராமானுஜருக்கு கோவிலும் உள்ளது.






இப்படிகளில் முடிகிறவர்கள் முழங்கால் இட்டு ஏறுகின்றனர்..






அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார்.

 பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.





முழங்கால் முறிச்சான் என்னும் இடத்தை கடந்து நமது பயணம் தொடர்கிறது ..திருமலையை நோக்கி..




திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம்  - கல்ப விரிஷா வாகனத்தில்  சுவாமி மலையப்பன்.










681.   
கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*
இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*

எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*
தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே


செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன்.

எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.

தொடரும்..




திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..

அன்புடன்

அனுபிரேம் 

8 comments:

  1. படங்களும், திருமலை தரிசனமும் அருமை.
    வரலாறு படிக்க சுவை.
    பாடலும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  2. அனு ஸாரி நாங்க லேட்டுப்பா... முந்தைய பகுதியும் வாசிச்சுட்ரோம்...இப்பகுதியும்...

    தகவல் விளக்கம் எல்லாமே நல்லாருக்கு படங்களும்...

    கீதா

    ReplyDelete
  3. முழங்கால் முறிச்சான்..

    இப்பதான் கேள்விப்படுறேன்.

    ReplyDelete
  4. கற்பக விருட்சத்தில் பெருமாளின் அழகு பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலுள்ளது.

    ReplyDelete
  5. அழகிய பதிவு... எவ்ளோ பெரிய சிலை அது ஆவ்வ்வ்வ்....

    ReplyDelete
  6. படங்கள் அழகிய காட்சி.

    ReplyDelete
  7. அழகான படங்கள்.

    முழங்கால் முறிச்சான் - தகவல்கள் அறிந்தோம். நன்றி.

    ReplyDelete