ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில்
தக்க்ஷன திருப்பதி, காமன்டோட்டி அருகில், ஓசூர்.
400 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்.
நந்தி சிலை கொண்ட பெருமாள் கோயில் இது.
இங்கு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார்.
கொடிமரம்
![]() |
இணையத்திலிருந்து |
தசாவதார காட்சிகள்
ஓசூர் - பெங்களுரு நெடுஞ்சாலையில் ஒரு பிரிவு சாலையில் மலையின் மீது இக்கோவில் அமைந்துள்ளது.
மனதிற்கு பரவசமும் , நிறைவும் தரும் அழகிய அருமையான இடம்.
சிறிய கோவில் என்றாலும் மீண்டும் மீண்டும் செல்லும் ஆசை வருகிறது...
கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதியில்லை.அதனால் வெளிப்புற காட்சிகள் மட்டும் இங்கு.
ஓம் நமோ நாராயணா..
2032
நிதியினை பவளத் தூணை* நெறிமையால் நினைய வல்லார்,*
கதியினை கஞ்சன் மாளக்* கண்டுமுன் அண்டம்ஆளும்,*
மதியினை மாலை வாழ்த்தி* வணங்கிஎன் மனத்து வந்த,*
விதியினைக் கண்டு கொண்ட* தொண்டனேன் விடுகிலேனே (2)
(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும் ,பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும் ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்கவல்லவர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும் , கம்ஸன் முடிந்துபோம்படி செய்து உலகங்களை ரக்ஷித்தருளினவனும்,
(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டேயிருப்பவனும் , அடியார்திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும் நான் வாழ்த்தி வணங்கும் படியாக , என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான, எம்பெருமானை ஸேவிக்கப்பெற்ற அடியேன் (இனி ஒருநாளும்) அவனை விடமாட்டேன்.
அன்புடன்
அனுபிரேம்
புதிதாக ஒரு கோவிலை பற்றிய அறிமுகம் தந்ததற்கு நன்றி திருமதி அனு அவர்களே
ReplyDeleteஅழகான கோவில். உங்கள் மூலம் நாங்களும் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். நன்றி.
ReplyDeleteஇதுவரை பார்த்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் இக்கோயிலுக்குச் செல்வேன். நன்றி.
ReplyDeleteபுதியதொரு திருக்கோயில் அறிமுகம்...
ReplyDeleteமகிழ்ச்சி.. நன்றி..
நல்லதொரு அழகான பதிவு. படங்கள் எல்லாமே அழகு.
ReplyDeleteபடங்கள் அழகு
ReplyDeleteநன்றி சகோதரியாரே
துளசி: புதிதாக இருக்கிறதே. கோயில் அழகு படங்களும் அழகு. புதிய இடம் அறிந்து கொண்டோம்.
ReplyDeleteகீதா: அனு ஆறு ஓடுதா கோயில் பக்கத்துல? போற வழியா? அப்படினா கண்டிப்பா இந்த இடம் போகணும்...ஆறு அருவி இருந்தா நான் மிக மிக விரும்பும் இடம்....ஆறு அழகா இருக்கே...என்ன ஆறு அனு இது? சுத்தமா இருக்கே...
தென்பெண்ணை ஆறு மிக அருகிலே ஓடுது கீதாக்கா..அங்க எடுத்த படங்களை தனி பதிவா போடுறேன்..
Deleteஅருவி இல்ல மலை உச்சியில் தான் கோவில்...திரும்ப கீழ் இறங்கி வந்து ஆறு பார்க்கணும் ..