11 November 2021

பொய்கையாழ்வார் ...

  இன்று  பொய்கையாழ்வார் திருநட்சித்திரம்..

 ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....





பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே !  !


பொய்கையாழ்வார்  

பிறந்த ஊர்         - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை             - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு              - திருமாலின் சங்கின் அம்சம்




முதல்திருவந்தாதி 

 

2107
எழுவார், விடை கொள்வார், ஈன் துழாயானை,
வழுவாவகை நினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை. 26

 


2108  
மலையால் குடை கவித்து, மா வாய் பிளந்து,
சிலையால் மராமரம் ஏழ் செற்று, - கொலையானைப்
போர்க் கோடு  ஒசித்தனவும், பூங் குருந்தம் சாய்த்தனவும்
கார்க் கோடு பற்றியான் கை. 27

 


2109  
கைய வலம்புரியும் நேமியும், கார் வண்ணத்து 
ஐய! மலர் மகள் நின் ஆகத்தாள், - செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று  எய்த
இறையான் நின் ஆகத்து இறை. 28

 

2110  
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்,
அறை புனலும், செந்தீயும் ஆவான், - பிறை மருப்பின்
பைங் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த,
செங் கண் மால் கண்டாய் தெளி. 29

 

2111  
தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீ இ, ஞானத்து 
எளிதாக நன்கு உணர்வார் சிந்தை, - எளிது ஆகத்
தாய் நாடு கன்றே போல், தண் துழாயான்  அடிக்கே,
போய் நாடிக்கொள்ளும் புரிந்து. 30

 



 


2112 
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி,
அரி உருவும் ஆள் உருவும் ஆகி, - எரி உருவ
வண்ண்த்தான் மார்பு  இடந்த மால் அடியை அல்லால், மற்று 
எண்ணத்தான் ஆமோ இமை? 31

 

2113  
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி,
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் - நமையாமல்,
ஆகத்து  அணைப்பார் அணைவரே, ஆயிர வாய்
நாகத்து  அணையான் நகர்  32

 


2114  
நகரம் அருள்புரிந்து நான்முகற்குப், பூமேல்
பகர மறை பயந்த பண்பன், - பெயரினையே
புந்தியால் சிந்தியாது  ஓதி உரு எண்ணும்,
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? 33

 

2115  
என், ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆலிலையில்
முன் ஒருவன்  ஆய முகில் வண்ணா, - நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால், பேர் அமர்க்கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? 34

 


2116  
ஆறிய அன்பில் அடியார், தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ - தேறி,
நெடியோய்! அடி அடைதற்கு அன்றே,ஈர் ஐந்து
முடியான் படைத்த முரண் 35













பொய்கையாழ்வார் ...2020

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..

அன்புடன்

அனுபிரேம்...

No comments:

Post a Comment