01 November 2022

ஸ்ரீ பொய்கையாழ்வார்

 இன்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சித்திரம் -  ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....







பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே .


பொய்கையாழ்வார்  

பிறந்த ஊர்         - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை             - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு              - திருமாலின் சங்கின் அம்சம்





ஆழ்வார்களில் சரோயோகி என அழைக்கப்படுகின்ற பொய்கையாழ்வார்  முதல் ஆழ்வாராக அழைக்கப்படுகின்றார். இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் எழுந்தருளியுள்ள யதோக்தகாரி சுவாமி புஷ்கரணியில் பூத்த தாமரை மலரில் அயோநிஜராய்,  ஐப்பசி திருவோணம் நட்சத்திரத்தில் தோன்றினார். தான் தரிசித்து மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய மங்கள ரூபத்தை கல்யாண குணத்தை பல்வேறு பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.   இந்த பிரபந்தத்திற்கு முதல் திருவந்தாதி எனத் திருநாமம். 

முதலாழ்வார்கள் மூவரில்  பொய்கையாழ்வார், ஸ்ரீ மஹாவிஷ்ணு தரித்திருக்கின்ற பாஞ்சசன்யம் எனப்படும் சங்கின் அம்சமாவார். 







முதல் திருவந்தாதி 

 

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே,*  முன்னம்
தரணி*  தனது ஆகத் தானே* - இரணியனைப்
புண் நிரந்த வள் உகிரால் *  பொன் ஆழிக் கையால்*  நீ
மண் இரந்து கொண்ட வகை?  36

2117

         
 

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள்,*  நாளும் 
புகை,விளக்கும்*  பூம் புனலும் ஏந்தி*   திசைதிசையின்
வேதியர்கள்*  சென்று இறைஞ்சும் வேங்கடமே* 

                                  வெண் சங்கம் ஊதிய வாய்  மால் உகந்த ஊர்  37      

2118

          

ஊரும் வரி அரவம்,*  ஒண் குறவர் மால் யானை,* 
பேர எறிந்த பெரு மணியை*  கார் உடைய
மின் என்று,*  புற்று அடையும் வேங்கடமே,*  மேல் அசுரர் 
எம் என்னும் மால் அது இடம்   38

2119

          
 

இடந்தது பூமி*  எடுத்தது குன்றம்,* 
கடந்தது கஞ்சனை, முன் அஞ்ச*  கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே*  நின்றதுவும் வேங்கடமே,*
பேர்ஓத வண்ணர் பெரிது  39 

2120

          



பெரு வில் பகழிக்*  குறவர் கைச் செந்தீ* 
வெருவிப் புனம் துறந்த வேழம்*  இரு விசும்பில்
மீன் வீழக்*  கண்டு, அஞ்சும் வேங்கடமே,*
  மேல் அசுரர்- கோன் வீழக் கண்டு, உகந்தான் குன்று  40

2121 

 


 




 
குன்று அனைய குற்றம் செயினும்*  குணம் கொள்ளும்* 
இன்று முதலாக என் நெஞ்சே,* என்றும்
புறன் உரையே ஆயினும்*  பொன் ஆழிக் கையான்* 
திறன் உரையே சிந்தித்திரு  41

2122

          


திரு மகளும் மண் மகளும்*  ஆய் மகளும் சேர்ந்தால்* 
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்!* - திருமகள்மேல்
பால் ஓதம் சிந்தப்*  பட நாகணைக் கிடந்த* 
மால் ஓத வண்ணர் மனம்?  42

2123  

        


மன மாசு தீரும்*  அரு வினையும் சாரா,* 
தனம் ஆய தானே கை கூடும்,* - புனம் மேய-
பூந் துழாயான் அடிக்கே*  போதொடு நீர் ஏந்தி,* 
தாம் தொழா நிற்பார் தமர் 43 

2124

       

தமர் உகந்தது எவ் உருவம், *  அவ் உருவம் தானே,* 
தமர் உகந்தது எப்பேர், மற்று அப் பேர்* தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து*  இமையாது இருப்பரே,* 
அவ் வண்ணம் ஆழியான் ஆம் 44 

2125

         

   
ஆமே அமரர்க்கு*  அறிய? அது நிற்க,* 
நாமே அறிகிற்போம், நல் நெஞ்சே,* பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த*  வாள் அரக்கன் நீள் முடியை,* 
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு     45

2126 

 

  












பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா .....

அன்புடன்
அனுபிரேம் 💛💛💛

No comments:

Post a Comment