18 November 2022

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே

  28 ."அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே"





சஞ்சயன் திருதிராஷ்டிரனின் சாரதி மட்டும் அல்ல நெருங்கிய தோழனும் கூட. சஞ்சயனது அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக அவரை உயர்த்தி விட்டது.

சஞ்சயன் ஆழ்ந்த கருத்துகளைக் சொல்லுவான்.

 ஒரு முறை திருதராஷ்டிரன், “நானும் நீயும் ஒரே குருவிடம் தான் பாடம் கற்றோம், ஆனால் உனக்கு மட்டும் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனக்கு அவை எல்லாம் புரிவதில்லை. உனக்கு மட்டும் நம் குரு ஏதாவது விசேஷமாக வகுப்பு எடுத்தாரா?” என்று கேட்டான் அதற்குச் சஞ்சயன் “பாடங்களைக் கேட்கும்போது மனதைத் தூய்மையாகவும் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமலும் வைத்திருந்தேன்,” என்று பதில் சொன்னான்.

அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அதுவும் சஞ்சயன் எதிர்பாராமலே இரண்டு மகத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஒன்று சஞ்சயனுக்கு வியாச மகரிஷி அளித்த ஞான திருஷ்டி, திருதராஷ்டிரரின் அரண்மனையில் அமர்ந்தபடி குருக்ஷேத்திரக் காட்சிகளை நேரில் பார்ப்பது. யுத்தத்தில் நடப்பவை ஒவ்வொன்றையும் மறைக்காமல் திருதிராஷ்டிரனிடம் ஒப்புவிப்பான் சஞ்சயன்.

எத்தரப்பில் கிருஷ்ணனின் அர்ஜுனனும் வீற்றிருக்கிறார்களோ அத்தரப்பே வெற்றியைப் பெரும் என தன் மனோதர்மம் கூறிய சத்தியம் உரைத்தான்.

மற்றொன்று, போருக்கு முன் கௌரவர்கள் சார்பில், பாண்டவர்களிடம் சஞ்சயன் தூது செல்கிறான். தூது செல்வதற்கு முன் திருதராஷ்டிரரிடம், தர்ம, நியாயங்களைப் பற்றி பேசுகிறான். ஆனால், தூதுவனாகிவிட்டபடியால், பாண்டவர்களிடம் போர் புரியாததால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க செல்கிறான்.

திருதராஷ்டரன் கேட்டுக்கொண்டபடி சஞ்சயன் பாண்டவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றான். வாசலில் காவலாளிகள் சஞ்சயனை தடுத்து நிறுத்தி “கிருஷ்ணரும், அர்ஜுனனும் அவர்கள் மனைவிகளுடன் உள்ளே இருக்கிறார்கள். யார் வந்தாலும் விடக் கூடாது என்று உத்தரவு” என்றார்கள்.

”சஞ்சயன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றான் சஞ்சயன் அதற்கு ஒரு காவலாளி “கிருஷ்ணன் அவர் பிள்ளைகள் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்...!” என்றார்.

சஞ்சயன் மீண்டும் “என் பெயரைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று நகராமல் நின்றான்.

காவலாளிகள் உள்ளே சென்றார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி. கண்ணன் சத்யபாமா பக்கத்திலும், அர்ஜுனன் திரெளபதியின் பக்கத்திலும் ஒருவர் மீது ஒருவர் கால் போட்டுக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கண்ணன் காவலாளி வந்திருப்பதைப் பார்த்து “தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேனே? என்ன விஷயம் ?” என்றார் காவலாளி தயங்கி “வாசலில் சஞ்சயன் ” என்று சொல்ல ஆரம்பிக்க, உடனே கண்ணன்.

“சஞ்சயனா ? உடனே உள்ளே விடு!” என்றார்.

காவலாளி ஒன்றும் புரியாமல் சென்றார். பக்கத்திலிருந்த அர்ஜுனனுக்கும் புரியவில்லை. 

கண்ணா “பெற்ற பிள்ளைகளையே உள்ளே விட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சஞ்சயனை உள்ளே விடச் சொல்லுகிறாயே!” என்று கேட்டான். 

அதற்குக் கண்ணன் “அர்ஜுனா உனக்குச் சஞ்சயனைப் பற்றித் தெரியாது. அவனிடம் பொறாமை கிடையாது. நேர்மை தான் அவன் கண். நாம் இப்படி சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் சந்தோஷப்படுவான். துரியோதனன் முதலிய கௌரவர்களிடம் பொறாமைப் படும்படியாக எடுத்துச் சொல்லுவான்” என்றார்.


உள்ளே வந்த சஞ்சயன் கண்ணன் மற்றவர்களுடன் ஆனந்தமாக இருக்கும் காட்சியைப் பார்த்து ரசித்துவிட்டுச் சில விஷயங்கள் பேசிவிட்டுச் சென்றான்.

கண்ணன் சொல்லியபடியே துரியோதனனிடம் ’கண்ணனும் அர்ஜுனன் இருக்கும் காட்சியைப் பார்த்தால் நிச்சயம் அவர்களுக்குத் தான் வெற்றி என்பது தெரிகிறது” என்றான்.


“சாமி ! சஞ்சயன் போல பெருமாளை அந்தரங்கமாகச் சேவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்  திருக்கோளூர்ப் பெண்மணி.





முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 5. வள ஏழ் உலகின்

எம்பெருமானின் சீலகுணம் 


மான் ஏய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 

கூனே சிதைய உண்டைவில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 

தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.5

2947


வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 

மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*

சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 

இனையாய்! இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  6

2948









29.  திருஅரிமேயவிண்ணகரம்

ஸ்ரீ அமிர்தகடவல்லி ஸமேத ஸ்ரீ குடமாடுகூத்த ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment