10 September 2022

23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே

"ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே"





வசுதேவர் தேவகிக்கு புத்திரனாக சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். அந்த கிருஷ்ணன் எப்படி இருந்தார் தெரியுமா?

"தேவகி பூர்வசந்த்யாம் அவிர்பூதம் மஹாத்மானா"

நான்கு திருக்கரங்கள். அவற்றுள் கதை, சங்கு, சக்கரம், தாமரை மலர் என திருக்கரங்களில் ஒவ்வொன்றாக காட்சி கொடுத்தார். மார்பில் மருவாக ஸ்ரீ வத்சம், பட்டுப் பீதாம்பரம், கழுத்தில் மாலை, வைர மணிமுடி, காதில் மின்னும் குண்டலங்கள் என கண்ணன் அலங்காரப் புருஷனாகக் காட்சியளித்தார்.

இந்த அவதாரப் புருஷனைக் கண்ட தேவகியும், வசுதேவரும் மகிழ்ந்தனர்.

வசுதேவர் குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 'இந்த அவதாரப் புருஷன் மூலம் கம்சன் வதம் நடக்கப் போகிறது. ஆனால், குழந்தை இப்படி இருந்தால்?' என பதபதைப்புடன் "நீயே மூவுலகை ரட்சிக்கும் நாராயணன் என நான் அறிவேன். ஆனால், இந்தக் கோலம் உனக்கு இப்போது உசிதமல்ல. உனது தெய்வ அம்சங்களான நான்கு தோள்கள், சங்கு, சக்கரத்தை மறைத்துக் கொள்" என வேண்டினார் - இதுதான் அவனது ஆகிருதியையோ நமது ஆகிருதியையோ நினைத்து பாராமல் மங்களாசாசனம் செய்யும் இயல்பு. இவ்வித அக்கறை அயோத்தி மக்களாலும் பெரியாழ்வாராலும் வெளிப்படுத்தப்பட்டது.


கண்ணனும் சங்கு சக்கரத்தை மறைத்துக்கொண்டு சாதாரண குழந்தையின் உருவத்தை எடுத்துக்கொண்டான்.

கண்ணன் “வசுதேவரே என்னைக் கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே நந்தகோபனும், யசோதையும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண் யோக மாயை. என்னை யசோதையிடம் விட்டுவிட்டு அந்தப் பெண் குழந்தையை இங்கே எடுத்து வாருங்கள் என்றார்.

வசுதேவரும் கண்ணனைக் கூடையில் வைத்து எடுத்துச் சென்றார். பூட்டப்பட்ட கதவுகள் திறந்தது. காவலாளிகள் தூங்கினார்கள். மழை, இருட்டும் சூழ்ந்துகொண்டது. யார் கண்ணிலும் படாமல் வசுவேதவர் எடுத்துச் சென்றார். மழை கண்ணன் மீது படாமல் ஆதிசேஷன் குடையாகப் பின் வந்தார். 

யமுனை வழிவிட்டது.

வசுதேவர் கோகுலத்துக்குச் சென்றார். யசோதை மயக்கத்திலிருந்தாள். கண்ணனை அவள் பக்கம் படுக்க வைத்தார். அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைச்சாலைக்கு வந்தார். 

தேவகியிடம் பெண் குழந்தையை கொடுத்தார். பெண் குழந்தை அழத் தொடங்க, உடனே காவலாளிகள் கம்சனிடம் சொன்னார்கள். கம்சன் பெண் குழந்தை என்று பாராமல் கொல்லத் துடித்தான். 
வாளால் வெட்டப் போனான். 

அப்போது அந்தக் குழந்தை அவனிடமிருந்து நழுவி ”ஏய் மடையனே! உன்னைக் கொல்ல இருப்பவன்  வேறொரு இடத்தில் பிறந்திருக்கிறான்” என்று சொல்லி மறைந்தது.

 

“சாமி திருமால் என்று தெரிந்தும் கம்சனால் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று ’சங்கு சக்கரத்தை மறைத்துக்கொள்’ என்று சொன்ன வசுதேவர் போல நான் இல்லையே, அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் திருக்கோளூர்ப் பெண்மணி.






முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

திருவாய்மொழி -முதற் பத்து

1 - 4.அம்  சிறைய 

தலைமகள் தூதுவிடல் 

நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே,

நல்கத் தான் ஆகாதொ? நாரணனைக் கண்டக்கால்

மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே.

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 4.5

2935


அருளாத நீர் அருளி, அவர் ஆவி துவராமுன்

அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று

அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால், இது சொல்லி

அருள் ஆழி வரிவண்டே! யாமும் என் பிழைத்தோமே? 4.6

2936












24. திருச்சிறுபுலியூர்

ஸ்ரீ திருமாமகள் ஸமேத ஸ்ரீ அருமாகடல் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment