14 September 2022

பதினோராவது நாள் - சட்டத்தேர்

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம்  நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.

 நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.

ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை

 ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை

எட்டாம் நாள் ----நரியைப் பரியாக்கிய லீலை.

ஒன்பதாம் நாள் --- பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் 

 பத்தாம்  நாள் --- விறகு விற்ற லீலை 

பதினோராவது  நாள் - காலை  சட்டத்தேரில் சுவாமி  ...










இரவு -- சுவாமி  அம்பாள் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் எழுந்தருளுளல்.





திருவாலவாய்

பாடல் எண் : 10

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்

பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்

எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருபது தோள்

அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன் . கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே ! அடியேனுக்கு அருள்செய்வாயாக .

மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

1 comment:

  1. பிட்டுக்கு மண் சுமந்த கதை, விறகு விற்ற கதை எல்லாம் வாசித்தேன் அனு. விறகு விற்ற கதையின் உள்ளர்த்தம் அருமை

    இப்பதிவும் சட்டத்தேர் - அருமை. படங்களும் விளக்கமும் ரசித்தேன் அனு

    கீதா

    ReplyDelete