வாழ்க வளமுடன் ...
5.கல்யாண மண்டபமும், லதா மண்டபமும்
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்டுவந்த விசயநகர பேரரசின் அச்சுதராயரின் அரசவையில் அமைச்சராக இருந்த விருபண்ணா, வீரண்ணா என்பவர்களால் கட்டப்பட்டதாகும் இக்கோவில். விஜயநகர பேரரசின் கட்டிடக் கலைக்கும், வரைகலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது.
லேபக்க்ஷியில் வீரபத்ரா கோயிலைக் கட்ட அரச கருவூலத்தில் இருந்து அரசரின் அனுமதியின்றி நிதி எடுத்ததாக விருப்பண்ணா குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், மன்னரின் தண்டனையைத் தவிர்ப்பதற்காக அவர் தன்னைக் குருடாக்கிக் கொண்டார். இன்றும் கல்யாண மண்டபத்தின் அருகில் உள்ள சுவரில் இரண்டு இருண்ட கறைகளைக் காணலாம். அவை அவருடைய கண்களால் செய்யப்பட்ட அடையாளங்கள் என்று கூறப்படுகிறது.
1583 இல் வீரண்ணா, விருப்பண்ணா ஆகிய சகோதரர்கள் இக்கோவிலைக் கட்டி முடித்தனர்.
முடிக்கப்படாத கல்யாண மண்டபம்
கல்யாண மண்டபம் அல்லது திருமண மண்டபம் என்பது பிரதான கோவிலுக்குப் பின்னால் உள்ள ஒரு திறந்த அமைப்பாகும், இதில் 38 தூண்கள் பல முனிவர்கள், கடவுள்கள், தன்வந்திரி மற்றும் 8 திக்பாலகர்களின் சிக்கலான வேலைப்பாடுகளுடன் உள்ளன. இந்த மண்டபத்தில் சிவனும் பார்வதியும் திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. சிவன் மற்றும் பார்வதி திருமணத்தை சித்தரிக்கும் அற்புதமான சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன.
சிவனின் பல்வேறு வடிவங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டு பார்க்கவே பரவசமாக இருந்தது.
இந்த மண்டபத்தின் கட்டுமானம் முற்றுபெறாமல் இருக்கிறது.
லதா மண்டபம்
கல்யாண மண்டபத்திற்கு அருகில், லதா மண்டபம் என்று அழைக்கப்படும் மற்றொரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் தூண்கள் சில அழகான வடிவமைப்புகள் மற்றும் மலர்கள் மற்றும் பறவைகளின் சிக்கலான உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன, அவை லேபக்க்ஷியின் புகழ்பெற்ற புடவை பார்டர் டிசைன்களாக இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற நூற்றுக்கணக்கான வடிவமைப்புகள் பல தூண்களில் காணப்படுகின்றன.
தொடரும்...
அனுபிரேம் 💕💕
லெபக்ஷி குறித்த அருமையான தொடர். படங்களும் விளக்கங்களும் நன்று. முந்தைய பாகங்களையும் படித்தேன்.
ReplyDeleteஎனது பயண அனுபவத்தையும் 4 பாகங்களாகப் பகிர்ந்திருந்தேன். நான் அறியாத சில தகவல்களையும் தங்கள் பகிர்வில் அறிந்து கொண்டேன். நன்றி.
நன்றி மா ...
Deleteஎனக்கு லேபக்க்ஷி பற்றிய அறிமுகமே தங்களின் வழியாக தான்..
தங்கள் தளத்தில் படங்கள் கண்டு, காண வேண்டும் என்று பெரு ஆவல் வந்தது, அந்த இடத்தை குறித்து வைத்து இருந்தேன் ....
வாய்ப்பு கிடைத்தவுடன் சென்று ரசித்து வந்தோம் ..
என்ன ஒரு இடம் ...இன்னும் பிரமிப்பு அகலவில்லை
சாரீ பார்டர்!! ஹாஹாஹாஹா ரங்கோலியும் போடலாம் போலகோலத்திலும் அத்தனை அழகு டிசைன், முடிக்கப்படாமல் இருக்கும் திருமண மண்டபம் அழகாக இருக்கு முடித்திருந்தால் கூட இப்படி இருக்குமா என்று தெரியலை எனக்கு ஏனோ இந்த வடிவம் இப்படி பல தூண்கள் அப்படியே நிற்பது அழகாக இருப்பது போல இருக்கு.
ReplyDeleteகீதா