17 September 2022

24. ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே.

 ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே....






கண்ணன் தேவகி வசுதேவர் தம்பதியருக்கு காராகிரஹத்தில் பிறந்தான். அவனது ஆணையின் பேரில் யமுனை ஆற்றை கடந்து கோகுலத்தில் யசோத நந்தகோபரில் இல்லத்தில் விட்டுவந்தார் வசுதேவர். அங்கேயே யசோதை நந்தனாகவே வளர்ந்தான் கண்ணன். யசோதை எந்த ஒரு வித்தியாசமும் உணரவில்லை.

அவன் க்ஷத்ரிய குலத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் வீட்டில் யாதவனாகவே (ஆயனாகவே) வளர்ந்தான்.

கோகுலத்தில் யசோதையும், நந்தகோபனும் ஆயர் குலத்தவர்கள். மாடு வளர்ப்பவர்கள். அதனால் கண்ணன் மாடுகளுடன் வளர்ந்தான். மாடுகள் பல இருந்ததால், அங்கே பால் ஆறு மாதிரி ஓடியது. கெட்டித் தயிரும், வெண்ணெய்யும் பானைகளில் வழிந்தது. ஊரே தயிர், வெண்ணெய் கலந்த வாசனையாக இருந்தது.

கண்ணன் வளர்வதை யசோதை ஆனந்தமாகப் பார்த்தாள். 

கண்ணன் ஓடி ஆடி விளையாடும்போது மண்ணில்  அவன் பாதம் பட்ட இடம் எல்லாம் சங்கு சக்கர அடையாளம் இருக்கும். கோகுலமே ஆனந்தமாக இருந்தது.

ஒரு நாள் கோகுலத்தில் மழை. ஊர் முழுக்க ஈரமாகிவிட்டது. கண்ணன் ஈர மண்ணை லட்டு மாதிரி உருட்டி வாயில் போட்டுக்கொண்டான். அண்ணன் பலராமன் பார்த்துவிட்டான். 

உடனே ஓடிச் சென்று யசோதையிடம் சொன்னான். யசோதை கண்ணனிடம் கேட்க வாயைக் கையால் மூடிக்கொண்டு “அம்மா வாயில் ஒன்றும் இல்லை” என்றான். 

“வாயைத் திற நானே பார்க்கிறேன்” என்று சொல்லக் கண்ணன் வாயைத் திறந்தான். 

யசோதை மயங்கி விழுந்தாள். 

மயங்கிவிழும் முன் அவள் கண்ணன் வாயில் கடல்கள், காடுகள், மலைகள், பறவைகள், விலங்குகள். நட்சத்திரம், சூரியன், நிலவு என்று எல்லா லோகங்களும் வாய்க்குள் தெரிந்தது. 

ஆனால் மண் உருண்டை மட்டும் அங்கே இல்லை. கண்ணன் சட்டென்று வாயை மூடிக்கொண்டான். 

ஒன்றும் தெரியாதது போல “அம்மா எழுந்துக்கோ!” என்று தட்டி எழுப்பினான். யசோதை எழுந்தவுடன் கண்ணனுக்கு ஏதோ பூதம் பிடித்துவிட்டது என்று திருஷ்டி சுற்றிப் போட்டாள்.


கண்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். அவனுக்கு எட்டாத இடத்தில் வெண்ணெய் பால் தயிர் எல்லாம் உரியில் ஏற்றி ஒளித்து வைப்பாள் யசோதை. 

கண்ணன் எம்பிப் பார்ப்பான். 

அவனுக்கு எட்டாது. உடனே தன் தோழர்களைக் கூப்பிட்டு ஒருவர் மீது ஒருவர் ஏறி உரியில் இருக்கும் வெண்ணெய்யைத் திருடிவிடுவான். குட்டு வெளிப்படாமல் இருக்க எல்லோருக்கும் சரியாகப் பங்கு போட்டுக் கொடுப்பான். 

எல்லா பானையும் கலியான பிறகு பானையை நன்றாகத் தட்டிப் பார்ப்பான் அப்போது பானை உடைந்துவிடும்.

வெண்ணெய், தயிர்ப் பானையைப் பறிகொடுத்த கோகுலத்துப் பெண்கள் எல்லாம் யசோதையிடம் ”உன் பையன் கண்ணன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று கண்ணன் செய்யும் விஷமங்களைக் கதை கதையாகப் புகார் சொல்லுவார்கள்.

 யசோதை கண்ணனைப் பார்ப்பாள். கண்ணன் தன் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்வான். யசோதை உடனே அவனைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு ’என் கண்ணன் ரொம்ப சமத்து. நீங்கள் அவனைப் பற்றித் தப்பாகச் சொல்லுகிறீர்கள் என்று வந்தவர்களை விரட்டிவிடுவாள்.

ஒருநாள் யசோதை பொறுமை இழந்து எல்லோரும் பார்க்கக் கண்ணனை ஒரு உரலில் சேர்த்து தாம்புக் கயிற்றால் கட்டினாள். லோகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கண்ணன் யசோதைக்குக் கட்டுப்பட்டான்.

யசோதை கயிற்றை அவன் இடிப்பில் சுற்ற மறுமுனையை எடுக்க யசோதை குனியக் கண்ணனே அதை எடுத்து யசோதையிடம் கொடுத்தான். 

கூடவே கைகூப்பி இனிமே செய்யமாட்டேன் என்று அஞ்சுவது போல, கெஞ்சுவது போலப் பாசாங்கு செய்தான். யசோதை உடல் பருமனாக இருப்பாள் அதனால் அவளால் கண்ணனைக் கட்டமுடியாமல் தவித்தாள். அவள் கண்களில் தளர்ச்சி தெரிந்தது. பிறகு கண்ணனே அவனைக் கட்டிக்கொண்டான்.

“கண்ணன் உரலை இழுத்துக்கொண்டு தவழ்ந்தான். பெரிய இரண்டு மரங்களுக்கு நடுவே புகுந்தபோது உரல் மாட்டிக்கொண்டுவிட்டது. கண்ணன் இழுத்த இழுப்பில் மரம் உடைந்து இரண்டு தேவர்கள் அதிலிருந்து வெளிப்பட்டுச் சாபம் தொலைந்து சென்றார்கள். அதன் பிறகு கம்சனால் அனுப்பபட்ட அசுரர்கள் நிறையப் பேர் வந்தார்கள்.

 எல்லோரையும் கண்ணன் தீர்த்துக்கட்டினான். 

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான்.

கோவர்தன மலையை தூக்கி, இந்திரனின் கோபத்திலிருந்து யாதவர்களை காத்தபோது, அவர்கள் அவனை தேவரோ என்று கேட்டார்கள். அதற்கு அவன், தான் அவர்களது உறவினன் என்றும், தன்னை அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்ககூடாதென்றும் கூறினான்.

”சாமி, நான் யசோதை போலக் கண்ணனை வளர்க்கவில்லையே, அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் திருக்கோளூர்ப் பெண்.



முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 4.அம்  சிறைய 

தலைமகள் தூதுவிடல் 


என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு  என்று ஒருவாய்ச் சொல்

என் பிழைக்கும்? இளங்கிளியே! யான் வளர்த்த நீ அலையே? 4.7

2936


நீ அலையே? சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்

நோய் எனது நுவல் என்ன, நுவலாதே இருந்தொழிந்தாய்

சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது

வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே. 4.8

2937










25. திருத்தலைச்சங்கநாண்மதியம்

ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாண்மதிய ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


No comments:

Post a Comment