16 July 2022

16. யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே

16 . "யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே"




மகாபாரதத்தில் அளவுக்கு அதிகமாக பொய் பேசும் கதாபாத்திரம் கிருஷ்ணனே எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட கிருஷ்ணர் ஒருமுறை சத்தியம் செய்கிறார். பொய் பேசுபவர் எப்படி சத்தியம் பண்ணலாம்? உண்மையை பேசுபவர் தானே சத்தியம் பண்ண வேண்டும்?

கிருஷ்ணர் சத்தியம் செய்வது, "நான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது உண்மையானால்...'' என்று. அந்த சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுகிறார்?.

மகாபாரதப் போர் நடந்தபோது பாண்டவர்களால் தன் தந்தையை இழந்த அசுவத்தாமன், பாண்டவர்களை பழி வாங்க எண்ணுகிறான். அப்போது, உறக்கத்தில் இருக்கும் பாண்டவர்களின் குழந்தைகளான உப பாண்டவர்களை, பாண்டவர்கள் என தவறாக எண்ணி வெட்டிக் கொன்று விடுகிறான்.

இதை அறிந்ததும் பாண்டவர்கள், அசுவத்தாமனனைத் தேடி வியாசரின் குடிலுக்கு வருகின்றனர்.

பாண்டவர்கள் வருவதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை பிரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மீது ஏவுகிறான். அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்பதால் வியாசபகவான், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறார். 

அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப்பெறுகிறான்.

ஆனால், அசுவத்தாமனுக்கோ, பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறும் மந்திரம் தெரியாது. அந்த அஸ்திரம் உத்தரையின் வயிற்றில் வளரும் ஒரே குலக்கொழுந்தான பரிக்ஷித்துவை பதம் பார்க்கச் செல்கிறது. 

அந்த சிசு பிறக்கும் போது உயிரில்லாமல் பிறக்கிறது. 

உத்தரையோ, கிருஷ்ணரே சரணாகதி என அவர் காலில் விழுந்து கதறுகிறாள். 

அப்போது, கிருஷ்ணர் "நான் எப்போதும் சத்தியம் பேசுவது உண்மையானால், இக்குழந்தை உயிர் பிழைக்கட்டும்.." என குழந்தையைத் தன் கால் கட்டை விரலால் நீவுகிறார். 

குழந்தை உயிர் பெறுகிறது.

நமது பூர்வாச்சரியர்கள் ஸ்ரீ ராமர் கூறிய உண்மைகளும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய பொய்களும் நமது அடைக்கலம் என்கின்றனர். 

"இராமோ விக்கிரஹவான் தர்மா" என்று இராமரை புகழ்வது போலவே "சனாதான தர்மா" என்று கிருஷ்ணரையும் கூறலாம் என்கிறாள் திருக்கோளூர் அம்மாள்.

தன் மரணப்படுக்கையில் யுதிஷ்டிரனின் கேள்விக்கு பீஷ்மர், ஸ்ரீ கிருஷ்ணரை தர்மத்தின் உருவம் என சுட்டிக் காட்டுகிறார். தன் பக்தர்களை ரக்ஷிக்க கிருஷ்ணர் உரைக்கும் வார்த்தைகள் விஷமத்தில் தோய்ந்து அசத்தியம் போல தோன்றினாலும் அவை சத்தியமே. 

அவர் அமைதித்தூதுவனாக கிளம்பிய போது திரௌபதி தான் கொண்டுள்ள க்ரோதத்திற்கு உதவுமாறு கூறுகிறாள். 

அப்போது கிருஷ்ணன், "வானமது இடிந்து விழலாம்; பூமியது பிளக்கலாம்; மேரு அது சுக்கு நூறாகலாம்; பரந்த கடல் அது வற்றிப்போகலாம்; இம்மாதிரியான அசாத்தியங்கள் உண்மையானாலும், என் வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாகாது" என்கிறார். 

சஞ்சயனும் கூட கிருஷ்ணரை சத்தியத்தின் மறுஉருவம் என்பார்.





"அப்படிப்பட்ட கிருஷ்ணர் போல நான் எச்சந்தர்ப்பத்திலும் சத்தியம் உரைப்பவளா? இல்லையே!" என்கிறாள் திருக்கோளூர் பெண். 


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 3. பத்து உடை அடியவர்க்கு 


பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 

வித்தகன்*  மலர் மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 

எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   


2921 


எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 

ஒளிவரும் முழு நலம் முதல் இல, கேடு இல; வீடு ஆம்*

தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 

அளிவரும் அருளினோடு*  அகத்தனன் ; புறத்தனன் அமைந்தே. 

2922












17. திருக்கண்ணபுரம்

ஸ்ரீ கண்ணபுரநாயகீ ஸமேத ஸ்ரீ சௌரிராஜாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment