14. "அவன் சிறியேன் என்றேனோ ஆழ்வாரைப் போலே"
திருக்குருகூரில் காரியாருக்கும், உடைய நங்கைக்கும் திருமணமாகிப் பல காலமாகக் குழந்தை இல்லை. திருக்குறுங்குடி பெருமாளை வேண்டிக்கொள்ள ஒரு குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை பிறந்தது முதல் பால் அருந்தவில்லை.
அழவில்லை.
கண் திறந்து பார்க்கவும் இல்லை.
ஆனால் குழந்தை உயிருடன் இருந்தது.
மற்ற குழந்தைகளைக் காட்டிலும் மாறுபட்டு இருந்ததால் அதற்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.
காரியாரும், உடைய நங்கையும் என்ன செய்வது என்று தெரியாமல், பிறந்த பன்னிரண்டாவது நாள் குழந்தையைத் திருக்குருகூர் கோயிலில் உள்ள பெரிய புளியமரத்தின் அடியில் ஒரு தொட்டில் கட்டி பெருமாளே நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று அதில் விட்டுவிட்டார்கள்.
அந்தக் குழந்தை தவழ்ந்து அந்தப் புளிய மரத்து பொந்தில் உட்கார்ந்தது.
பதினாறு வருடம் கடந்தது.
ஆனால் அந்தக் குழந்தை கண் திறவாது, வாய் பேசாது யோக நிலையிலிருந்தது.
திருக்கோளூரில் பிறந்தவர் மதுரகவி ஆழ்வார்.
வேதம், வேதாந்தம், தமிழ், வடமொழி எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தபின் அவர் புண்ணிய தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.
ஒரு நாள் அயோத்தியில் ராமரை சேவித்துவிட்டு இரவு ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டு ஆகாசத்தைப் பார்த்தார்.
வானத்தில் பேரொளி ஒன்று தெரிந்தது.
இந்த ஒளி எதனால், எங்கிருந்து வருகிறது என்று அறிய ஆவலாகப் பலரைக் கேட்டார் ஆனால் யாருக்கும் விடை தெரியவில்லை.
அந்தப் பேரொளி தென் திசையிலிருந்து வந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
தினமும் இரவு அந்த ஓளி வரும் திசையை நோக்கிப் பல மாதங்கள் நடந்த பின் ஒரு நாள் அந்த ஒளி மறைந்தது.
ஒளி தோன்றிய இடம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார்.
அங்கு இருந்தவர்களிடம் “இது என்ன இடம்? இங்கே ஏதாவது விசேஷம் உண்டா ?” என்று கேட்டபோது ஊர் மக்கள், இது திருகூருகூர், ஊரில் விசேஷம் ஒன்றும் இல்லை ஆனால் இங்கே ஒரு குழந்தை பதினாறு வருடமாகப் பால் குடிக்காமல், மூச்சுப் பேச்சு இல்லாமல், புளியமரத்துப் பொந்தில் வாழ்ந்துவருகிறது” என்றார்கள்.
மதுரகவி ஆழ்வார் இந்தக் குழந்தையிடம் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும் என்று அந்தப் புளியமரம் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
மேலே பார்த்த அதே ஒளியை அந்தக் குழந்தையின் முகத்தில் தெரிந்தது.
குழந்தை அசைவற்று இருந்தது.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார்.
ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார்.
மதுரகவி அவரை நோக்கி “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.
ஆழ்வாரும் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று அருளினார்.
உடனே மதுரகவி அந்தக் குழந்தையின் பெருமையை உணர்ந்தார்.
அவரின் ஞானத்தை வியந்து காலில் விழுந்து, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார்.
பிறகு ஆழ்வாருக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்துகொண்டு அவர் பாசுரங்கள் பாட அதை ஓலைச்சுவடியில் எழுதினார் ...
ஆழ்வார் வேதத்துக்குச் சமமாக நான்கு பிரபந்தங்களைப் பாடினார்.
பல ஊர் பெருமாள் ஆழ்வாரிடம் வந்து எங்களைப் பற்றிப் பாடுங்கள் என்று ஆழ்வாரிடம் பாடல் வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
இவ்வளவு ஞானம் உள்ள ஆழ்வார் தன் பாடல்களில் எனக்கு அறிவு இல்லை, நல்ல குணங்கள் இல்லை, நான் ஒரு பாவி என்று தன்னை மிகவும் தாழ்ந்தவராகக் கூறிக்கொள்கிறார்.
இவ்வளவு ஞானம் உள்ள ஆழ்வாரே தன்னை சிறியன் என்று கூறிக்கொள்கிறார்.
ஒன்றுமே இல்லாத நான் அப்படிச் சொல்லவில்லையே!. அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் அந்தப் பெண்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய் மொழி -முதற் பத்து
1 - 2. வீடுமின் முற்றவும்
ஏழாம் பாசுரம் - அவனுடைய மிகப் பெரிய விபூதியைப் பார்த்து அஞ்சி விலகாமல், அவனுக்கு அத்தோடு உண்டான ஸம்பந்தத்தை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு முயற்சி செய் என்கிறார்.
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃதென்று அடங்குக உள்ளே
2916
மிகவும் அழகியதான செல்வத்தை ஒன்றுவிடாமல் பார்த்து “ஈச்வரனுக்கு அது மிகவும் அழகான, பெருமையைக் கொடுக்கும் சேஷமாயிருக்கும்” என்று உணர்ந்து அதினுள்ளே மூழ்க முயற்சி செய்.
எட்டாம் பாசுரம் - எப்படி வணங்குவது என்பதை அருளிச்செய்கிறார்.
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே
2917
மனஸ்ஸும் வாக்கும் உடம்பும் நமக்கு முதலிலேயே இருப்பதாய், இருக்கும் இம்மூன்றையும், இவற்றின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்தறிந்து, மற்ற விஷயத்தில் இருந்து விலக்கி, எம்பெருமானாகிய வகுத்த விஷயத்தில் பரதந்த்ரனாய் ஒதுங்கு.
தகவல்கள் நன்று. மிகவும் ரசித்தேன்.
ReplyDelete