18 June 2022

12. "எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே"

12. "எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே"




பெரியாழ்வாரின் மற்றொரு பெயர் பட்டர்பிரான். 

இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். 

எப்போதும் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள வடபத்ரசாயி பெருமானைச் சிந்தனையில் கொண்டிருந்ததால் விஷ்ணு சித்தர் எனப்பட்டவர் ஆவார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பூஞ்சோலை ஒன்றை பராமரித்து வந்த பட்டர்பிரான், ஒவ்வொருநாளும் வடபத்ராசாயிக்கு மாலை தொடுப்பது வழக்கம்.


வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தர். ஒருநாள் அவர்  மாறு வேடத்தில் இரவில் நகர் வலம் வந்தார். 

அப்போது வைதீக அந்தணன் ஒருவர் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். 

வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார் என விசாரித்தார். 

அதற்கு அவர் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினார்.


மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ, எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார். 

அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றார். 

மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டார்.


அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம் செல்வம் இருந்தாலும், மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே என எண்ணினார்.

 உடனே, தன் நண்பரும், சிறந்த வேதவித்துவுமான செல்வநம்பி என்பவரை அழைத்து "மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் தருபவன் யார்?" என்றார்.


செல்வநம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார். சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவித்தார். 

யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை.


இந்நிலையில், இறைவன் பட்டர்பிரானின் கனவில் வந்து, "இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து பொற்கிழியைப் பெற்று செல்!" என்றார்.

"என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே!" என மன்னனுக்கு விளக்கிவிட்டு, பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகே சென்றார் பட்டர்பிரான்.

கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது. 

அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர்.

 மன்னன் தன் பட்டத்து யானையில் அவரை அமர்த்தி மதுரைத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.


அப்போதுதான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தாயாரோடு, யானை மீது பவனி வரும் தன் பக்தனைக் காணவந்தார். சாதாரணமாக ஒருவரை மற்றவர்கள் பார்த்தாலே அவருக்கு பல பிரச்சினை வந்துவிடும். அதுவும் இந்த கலிகாலத்தில் இறைவன் தன் திருமேனியைக் காட்டுகிறானே அவனுக்குத் திருஷ்டி உண்டாகுமே என்று இறைவனுக்கே "பல்லாண்டு! பல்லாண்டு!" என பாட ஆரம்பித்துவிட்டார், பட்டர்பிரான்.





அப்படி பட்டர்பிரான் சொன்னது போல "நான் என்னை உணர்ந்து அவனை என்பெருமான் என்று அழைத்தேனா? இல்லையே! பிறகு ஏன் நான் இங்கிருக்க வேண்டும்? நான் கிளம்புகிறேன்" என்றாள் திருக்கோளூர் பெண்மணி.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய் மொழி -முதற் பத்து

1 - 2. வீடுமின் முற்றவும் 


மூன்றாம் பாசுரம் - எப்படி விடுவது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறார்.


நீர் நுமது என்று இவை வேர்முதல் மாய்த்து  இறை

சேர்மின், உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே

2912


ஆத்மா மற்றும் அதன் உடைமைகளில் இருக்கும் அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகிய இவற்றை ருசி மற்றும் வாஸனைகளாகிற வேரோடே அறுத்து எம்பெருமானைச் சேருங்கள். ஆத்மாவுக்கு இதையொத்த நிறைவு வேறில்லை.


நான்காம் பாசுரம் - இப்படி மற்ற விஷயங்களை விட்டு பற்றப்படும் எம்பெருமானின் பெருமையை அருளிச்செய்கிறார்.


இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு

எல்லை இல் அந் நலம் புல்கு,  பற்று அற்றே

2913


அசித்தைப்போலவும் சித்தைப்போலவும் இல்லாத அவனுடைய ஸ்வரூபமானது எல்லையில்லாத ஆனந்தத்தை வடிவாகக் கொண்டிருக்கும். ஆகையால் மற்ற விஷயங்களில் பற்றை விட்டு, எம்பெருமானை ஆசையுடன் பற்று.










13 . திருவிண்ணகர் (எ) ஒப்பிலியப்பன் கோவில்

ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ.


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment