தஞ்சாவூர் 24 பெருமாள் கருடசேவை...
ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சாவூரில் 24 பெருமாள் கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவர்...
அதன்படி தஞ்சாவூரில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 88-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.
அக்காட்சிகளின் அணிவகுப்பு இன்று ......
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் பிற 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.
அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் சென்றார்.
அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள் லட்சுமியுடன் வந்தார்.
இவர்களை தொடர்ந்து நரசிம்ம பெருமாள்,
வெண்ணாற்றங்கரை மணிக்குன்னப் பெருமாள்,
கல்யாண வெங்கடேச பெருமாள்,
கரந்தை யாதவகண்ணன்,
கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள்,
கோதண்டராமர்,
கீழவீதி வரதராஜ பெருமாள்,
தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள்,
அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள்,
எல்லையம்மன் கோவில்தெரு ஜனார்த்தன பெருமாள்,
கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள்,
கோவிந்தராஜ பெருமாள்,
மேலவீதி ரெங்கநாத பெருமாள்,
விஜயராம பெருமாள்,
நவநீதகிருஷ்ணன்,
சக்காநாயக்கன்தெரு பூலோக கிருஷ்ணன்,
மகர்நோம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன்,
பிரசன்ன வெங்கடேச பெருமாள்,
பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள்,
சுங்கான்திடல் லட்சுமி நாராயண பெருமாள்,
கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள்,
கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து அனைவருக்கும் காட்சியளித்தனர்.
953
எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம்,
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் *
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் *
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி *
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம். (2)
பெருமாள் திருவடிகளே சரணம் !!
தாயார் திருவடிகளே சரணம் !!
அன்புடன்
அனுபிரேம்
அழகிய படங்கள்.. கொடுத்து வைத்த தஞ்சை மக்கள்.. நானும் தான்.. மகிழ்ச்சி..
ReplyDeleteநானும் இரண்டு பதிவுகளாக கருட சேவையை வெளியிட்டுள்ளேன்..
ReplyDeleteபல ஊர்களில் இருக்கும் பெருமாள் கருட வாகனங்களில்.... பார்க்கப் பார்க்க பரவசம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஅழகிய படங்கள்.
ReplyDelete