முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.
நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.
ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் ----நரியைப் பரியாக்கிய லீலை.
ஒன்பதாம் நாள் --- பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்
பத்தாம் நாள் --- விறகு விற்ற லீலை
பதினோராவது நாள் - காலை சட்டத்தேரில் சுவாமி ...
பன்னிரெண்டாம் நாள் --- பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி
இரவு ---
சுவாமி : வெள்ளி ரிஷப வாகனம்
அம்பாள் : வெள்ளி ரிஷப வாகனம்
ஆவணி மூல உற்சவம் மஹாஷாந்தி - பிராய்ஸ்சித்த ருத்திராபிஷேகம் !!!
6.019.திருவாலவாய்
2275
முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
6.019.1
எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய், செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய், அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய், தூயமுத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான்பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணிமூலத் திருவிழாவின் காட்சிகளை முகநூலில் பதிவிட்ட அன்பர்களுக்கும், இப்பதிவுகளை தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் நன்றிகள் பல .....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment