வாழ்க வளமுடன் ...
சாப்பிடும் தட்டு .. |
இந்த அமைப்பு சுற்று சுவர் முழுவதும் உள்ளது ....
நாங்கள் காலை 6 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி இங்கு 8 மணிக்கு வந்துவிட்டோம். பொதுவாக விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாவே இருக்கும், அதனால் 9 மணிக்குள் வந்தால் பொறுமையாக காணலாம். நாங்கள் வந்த பொழுது யாருமே இல்லை எனவே ஒவ்வொரு இடத்தையும் பொறுமையாக கண்டு ரசித்தோம்.
இங்கு செல்லும் முன் தகவல்களை அறிந்து சென்றால் நன்றாக ரசித்து காண முடியும்.
முடிந்த அளவு லேபக்க்ஷி இடத்தின் அழகையும், தகவல்களையும் இங்கு பகிர்ந்தேன். வாசித்து ரசித்த அனைவருக்கும் நன்றிகள்...
இன்னும் ஒன்று இங்கும் வரும் பொழுது கையில் உணவையும் எடுத்து வந்தால் இன்னும் பொறுமையாக காண நேரம் கிடைக்கும். இங்கு முழுவதும் காண 3 மணி நேரம் ஆகும். நாங்கள் இங்கு 10.30 வரை இருந்து விட்டு கையில் எடுத்த வந்த இட்லியையும் சாப்பிட்டு அடுத்து பெரிய நந்தியை காண சென்றோம்.
தொடரும்...
அனுபிரேம் 💕💕
குழித்தட்டு வாவ்!!! அருமை....அது போல அது குதிரையா அல்லது சிங்கம் போலில்லை அதன் மீது குதிரை ஓட்டுவது போன்ற சிற்பம் அழகு! எல்லாமே அழகு அனு....ரசித்துப் பார்த்தேன்...எப்படி இந்த வீடியொக்கள் எனக்கு வராமல் போச்சு மொபைலில் காட்டிருக்கணுமே.....நீங்கள் வீரபத்திரர் கோயில் ஆரம்பம் நான் வாசித்த நினைவு...லேபக்ஷி போக நினைத்திருக்கும் இடம்னும் சொன்ன நினைவு ஆனால் அது எந்தப் பதிவு என்று தெரியலை கருத்து வந்ததா என்றும் தெரியலை....இன்று போட்ட கருத்து அல்ல....நீங்கள் தொடங்கிய போது,.....
ReplyDeleteஆமாம் இங்கு செல்ல சாப்பாடு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிகிறது....அது சரி நான் நினைத்தேன் அத்தனையும் காண ஒரு நாள் போதாது எனக்கு என்று நினைச்சேன் நீங்க 3 மணினேரம் நு சொல்லிருக்கீங்க.....எனக்கு முழு நாள் வேண்டும் போலத் தோன்றுகிறது....பின்ன வளைச்சு வளைச்சு புகைப்படங்கள் வீடியோன்னு எடுத்துத் தள்ளிடுவேனே..(உங்களைப் போலத்தான்....உங்களுக்கும் கண்டிப்பாக இந்த 3 மணி நேரம் போதுமாக இருந்திருககதுன்னு நினைக்கிறேன்!!!!!!)..அப்ப என் கேமராக்கு சார்ஜையும் பார்த்துக்கணும் போல!!!
அப்புற, யுட்யூபில் இன்னும் ஒரு தடவை பார்க்கிறேன் எல்லாம்...
கீதா