13 August 2022

20. அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே

20.  "அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே"





இராமாயணம் இயற்றப்பட்ட காலம் ரிஷிகளின் காலம் எனலாம். ஏனெனில், இராமயண காலத்தில் தான் நிறைய ரிஷிகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

திரேதா யுகத்தில் எத்தனை ரிஷிகள் இருந்துள்ளனர் என்று பார்த்தால், விசுவாமித்திரர், வசிஷ்டர், அத்திரி, கௌதமர், அகத்தியர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


ஒருமுறை, விசுவாமித்திரர் தசரதரிடம் ஒரு உதவி கேட்க அயோத்திக்குச் சென்றார். விஷ்வாமித்திரைக் கண்ட தசரதர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். அவரை வணங்கி வரவேற்று உபசரித்தார், தசரத சக்கரவர்த்தி. பின், விஸ்வாமித்திரருக்கு எது வேண்டுமென்றாலும் அதை நிறைவேற்ற சித்தமாக இருப்பதாக கூறி வாக்களித்தார்.

தனது சித்தாஸ்ரமத்திற்கு ராக்ஷசர்களால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் இன்னும் சில தினங்களில் அங்கு யாகம் ஒன்றை நடத்தாவிருப்பதாகவும் அதற்கு காவலாக இராமனையும் இலக்குவனையும் அனுப்பி வைக்குமாறு கூறினார் விஸ்வாமித்திரர்.

இதைக் கேட்ட தசரதருக்கு, அவர் தன் உயிரையே கேட்டது போல இருந்தது. 

ஏனெனில், தசரதர் தன் மூத்த புதல்வன் இராமன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். தசரதரைப் பொறுத்தவரை இராமன் இன்னும் குழந்தைதான். எவ்வளவு நாட்கள் ஆனாலும் நம் பெற்றோருக்கு நாம் என்றும் குழந்தை தானே?

விஸ்வாமித்திரரிடம், "இராமன் சிறு பாலகன். அவனால் இப்பணியை நிறைவேற்ற இயலாது. நானே வந்து அதை நிறைவேற்றி தருகிறேன் முனிவரே!" என்கிறார் தசரதர்.

அதைக்கேட்ட விசுவாமித்திரர் சொல்கிறார், "அரசனே! நான் இராமனை அறிவேன். அவன் ராக்ஷஸர்களை அழிக்கும் சக்தி பெற்றவன். வசிஷ்டரை மற்றும் என்னை போன்ற தபசுவீகளுக்கே தெரியும் அவன் உண்மையில் யாரென்று. என் வாக்கு சத்தியமானது என்பதை புரிந்துக்கொள்!"


அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்

வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-


(நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்

மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்

இங்கே இருக்கிறவர்களாய் -இமே

தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்- )


வசிஷ்டர் அதனை ஒப்புக்கொண்டு தசரதரிடம் இராமனையும் இலக்குவனையும் விஸ்வாமித்திரரோடு அனுப்பி வைக்க சொல்கிறார். தசரதரும் அதற்கு சம்மதித்து, இரண்டு இளவரசர்களையும்  அனுப்பி வைக்கின்றார். அவர்கள் இருவரும் தாடகை  போன்ற அரக்கர்களிடமிருந்து   யாகத்தை காக்க உதவினர்.




"விஸ்வாமித்திரரைப் போல சத்தியத்தை புரிந்துக் கொண்டு பேசமுடியுமா என்னால்? நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்?" என்கிறாள் திருக்கோளூர் பெண்மணி.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 3. பத்து உடை அடியவர்க்கு 


வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,    இடம்பெறத் துந்தித்

தலத்து எழு திசைமுகன் படைத்த நல்  உலகமும் தானும்

புலப்பட பின்னும் தன் உலகத்தில்  அகத்தனன் தானே

சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள, இவை அவன் துயக்கே   (9)

2928

 

துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்  அமரரைத் துயக்கும்

மயக்கு உடை மாயைகள் வானிலும்  பெரியன வல்லன்

புயல் கரு நிறத்தனன், பெரு நிலங்   கடந்த நல் அடிப் போது

அயர்ப்பிலன் அலற்றுவன், தழுவுவன்  வணங்குவன் அமர்ந்தே   (10)

2929

 

அமரர்கள் தொழுது எழ அலைகடல்  கடைந்தவன் தன்னை

அமர் பொழில் வளங் குருகூர்ச்  சடகோபன் குற்றேவல்கள்

அமர் சுவை ஆயிரத்து, அவற்றினுள்  இவை பத்தும் வல்லார்

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே   (11)

2930










21. திருநந்திபுரவிண்ணகரம்

ஸ்ரீ செண்பகவல்லீ ஸமேத ஸ்ரீ விண்ணகர ஜகந்நாதாய நமஹ

சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment