02 August 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....

 ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர உத்ஸவத்தின் ஒரு அங்கமான ம்ருத்சங்க்ரஹனம் அங்குராா்பணம். தாயாா் அவதரித்த நந்தவனத்திலிருந்து மண் எடுக்கும் வைபவம் .....









ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப் பூர உற்சவத்தை முன்னிட்டு  சேனை முதல்வர் புறப்பாடு..





ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம்  த்வஜாரோஹண காட்சிகள் ...  







ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரம் ... 








ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி  : மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்


ஆறாம் பாசுரம். கண்ணன் ரிஷிபத்னிகளிடத்தில் உணவு உண்ட இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.


கார்த்தண் முகிலும் கருவிளையும்
 காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
 இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து 
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் 
பத்தவிலோசனத்து உய்த்திடுமின்  6

622


மழைக்காலத்திலுண்டான குளிர்ந்த மேகமும் கருவிளைப்பூவும் காயாம்பூவும் தாமரைப்பூவுமாகிற இவைகள் எதிரே வந்து நின்று “நீயும் ஹ்ருஷீகேசனிடத்தில் போ” என்று என்னை நிர்ப்பந்தம் செய்கின்றன. அதனால், கண்ணன் பசு மேய்ப்பதால் வேர்வைபொங்கி, பசியினால் வருந்தி, வயிறு தளர்ந்து “வேண்டிய அளவுக்கு ப்ரஸாதம் உண்ணும் காலம் இது” என்று ரிஷி பத்னிகளின் வரவை எதிர்பார்த்திருந்து நெடுங்காலம் கடாக்ஷித்துக்கொண்டிருக்குமிடமான பக்தவிலோசனம் என்ற ஸ்தானத்திலே என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்




No comments:

Post a Comment