குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கந்தசஷ்டி திருவிழா 2022
3 ஆம் திருநாள் இரவு ரிஷப வாகனம்
4 ஆம் திருநாள் இரவு அன்ன வாகனம், கஜமுகாசூரன் மோக்ஷம்
5 ஆம் திருநாள் இரவு வெள்ளி மயில் வாகனம், சிங்கமுகாசூரன் மோக்ஷம்
அன்னை மட்டுவார்குழலி உடனமர் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் - கந்தசஷ்டி விழா - சூரசம்ஹாரம்
கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர்
தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 4
தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான், பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம் அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள் வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும், அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த, குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக பொருந்தி இருந்தது.
முருகா.. முருகா..
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை...