22 October 2022

பெருமாள் மலை, துறையூர்

  ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.

துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை.













இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளது போல் கருவறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார்.  அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

நரசிம்மர் 





















இந்த வருடம் இரண்டாம் சனிக்கிழமை அன்று கிடைத்த தரிசன காட்சிகள் இவை ...



















1500 படிகள் ஏறி பெருமாளை காண வேண்டும், மிக சிறப்பான பராமரிப்பில் உள்ள படிகள். எப்பொழுதும்  மலைக்கு படியில் ஏறி, இறங்கி  வருவோம். ஆனால்  இந்த வருடம் மழையின்  காரணமாக இறங்கும் பொழுது  வேனில் வந்துவிட்டோம்.

அதிக கூட்டம் இல்லாமல் இனிய தரிசனம் இங்கு.











577.   
விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 
கண்ணீர்கள் முலைக்குவட்டில் *  துளி சோரச் சோர்வேனைப்* 
பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   



578.   
மா முத்தநிதி சொரியும்*  மா முகில்காள்*  வேங்கடத்துச் 
சாமத்தின் நிறங்கொண்ட*  தாளாளன் வார்த்தை என்னே* 
காமத்தீ உள்புகுந்து*  கதுவப்பட்டு இடைக் கங்குல்* 
ஏமத்து ஓர் தென்றலுக்கு*  இங்கு இலக்காய் நான் இருப்பேனே*     


 
579.   
ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 
குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*   


ஸ்ரீ  பிரசன்ன வேங்கடாசலபதி திருவடிகளே சரணம் ...


அன்புடன்,
அனுபிரேம்

1 comment: