30 October 2022

ஸ்ரீ மணவாள மாமுனிகள் --- குடை புறப்பாடு ..............

 மணவாளமுனிகள் 652 ஆவது திருநட்சத்திர உற்சவம்-

ஸ்ரீ மணவாள மாமுனிகள்  திருநட்சத்திரம் நேற்று  --- ஐப்பசி  திருமூலம்.....


 திருவல்லிக்கேணி, சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற 

ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ மணவாளமுனிகள் - குடை புறப்பாடு ..............





மணவாளமாமுனிகளின் வாழிதிருநாமம்:

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணை அடியோன் வாழியே

ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே

அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே

ஏராரும் எதிராசர்  என உதித்தோன் வாழியே

முப்புரி நூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே

மூதரியும்  மணவாள மாமுனிவன் வாழியே








அவதார ஸ்தலம்    :  ஆழவார்திருநகரி

ஆசார்யன்               : திருவாய்மொழிப் பிள்ளை

பரமபதித்த இடம்   :  திருவரங்கம்

காலம்                        : கிபி 1370 - 1443


ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் கடைசியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் 1370 - 1443 முதல் ).  ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான் தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்).


ஸ்ரீராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் 120வது வயதில் வைகுந்தம் சென்றதால் மீதமுள்ள 80 ஆண்டுகள் மணவாள மாமுனிகள், ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரே மாமுனிகளாக அவதாரம் எடுத்தார் என்பது பூர்வர்களின் வாக்கு.  


பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில்   இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....


உபதேசரத்தின மாலை என்ற பொக்கிஷத்தை  அருளிச்செய்தவர்.


அடியார்கள் வாழ அரங்கநகர்வாழ

சடகோபன் தண்தமிழ் நூல்வாழ

கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ

மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்











658

தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் 
அரங்கனைத்*  திருமாது வாழ் 
வாட்டம் இல் வனமாலை மார்வனை 
வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*
ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-
எய்தும் மெய்யடியார்கள்தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது 
காணும் கண் பயன் ஆவதே  (2)



659
  
தோடு உலா மலர்-மங்கை தோளிணை 
தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
நீடு மா மரம் செற்றதும்*  நிரை
 மேய்த்ததும் இவையே நினைந்து*
ஆடிப் பாடி அரங்க! ஓ! என்று 
அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து 
ஆடும் வேட்கை*  என் ஆவதே?  


(பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு, உண்டிராக் கிடக்கும்போது முடலுக்கே கரைந்து நைந்து” என்றபடி அல்லும் பகலும் ஸரம்ஸாரிக சிந்தனைகளே நிகழும் லௌகிகர்படி யில்லாமல் எம்பெருமானுடைய திவ்யசரிதங்களையே மாறி மாறி அநுஸந்தித்து, அவ்வநுஸந்தாநத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல் பகவத் நாமங்களை வாய்விட்டுக் கதறுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாததூளிகளில் அவகாஹிக்கப்பெற்றால், பிறகு ‘கங்கையில் நீராடவேணும்’ என்கிற விருப்பமும் வியர்த்தமேயாம் என்கிறார்.)



ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....


அன்புடன் 

அனுபிரேம் 💗💗

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இறைவனின் அருளை பெற்ற மணவாள மாமுனிகளை மனதாற வணங்கிக் கொண்டேன். இறைவன் பார்த்தசாரதியின் தரிசனமும் கிடைக்கப்பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. குடை அலங்கார புறப்பாடு படங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாய் இருந்தன. படங்களும், பதிவும் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete