வாழ்க வளமுடன் ...
லேபக்க்ஷி கோவிலுக்கு எதிராக சுமார் 20 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட நந்தி உள்ளது. பசவண்ணா என்றழைக்கப்படும் இந்த நந்தி சாதாரண நந்தி போல் அல்லாமல் கொஞ்சம் தலை தூக்கியவாறு ஆனால் பணிவான தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நந்தி 15 அடி நீளம், 27 அடி உயரம் கொண்டு ஆந்திரத்தில் உள்ள நந்திகளில் மிகப்பெரியதாக உள்ளது. இந்த நந்தி 16-ம் நூற்றாண்டில் செய்யப் பெற்றதாகும். வீரபத்திரர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. ஆனால் கோவிலின் நேர் கோட்டில் சிவனை நோக்கியவாறு அமைந்துள்ளது இதன் சிறப்பு.
தூரமாய் ஜடாயு பார்க் |
இங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு பூங்காவும் உள்ளது. காலை உணவை இங்கு அமர்ந்து உண்ணலாம். உள்ளே நீர் இல்லாமல் சிறு குளம் உள்ளது.ஆனால் சுத்தமாக பராமரிக்கப்படும் இடம்.
தொடரும்...
அனுபிரேம் 💕💕
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. அழகான படங்கள். நந்திதேவரை தரிசித்துக் கொண்டேன். பசவண்ணர் என்றதும் இங்கிருக்கும் பசவங்குடி நினைவுக்கு வந்தது. நீங்கள் பதிவிட்டிருப்பது அழகான அமைதியான இடங்கள். முடிந்தால் ஒரு முறை சென்று பார்த்து வரலாம். பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ...இன்னும் இப்பயணத்தில் கண்ட இடங்கள் உண்டு ...அடுத்த பதிவுகளில் வரும் ...காலை 6 மணிக்கு கிளம்பி மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டோம் ..
Deleteசரியாக கிளம்பி உணவுடன் சென்றால் ஒரே நாளில் அருமையான பயணமாக அமையும் ...
நந்தி அழகோ அழகு!! அனு....காணொளியும் கண்டேன் சூப்பர். ரசித்து பார்த்தேன் நந்தியின் அழகை. நீங்க பரவால்ல டக் டக்குனு போட்டுடறீங்க பாராட்டுகள்.
ReplyDeleteநந்தி இருப்பது ஆந்திரா ஆனா பாருங்க பேரு கர்நாடகத்தில் பரவலாக இருக்கும் பெயர் பசவண்ணா!!! பார்டர்ன்றதுனால இருக்குமோ
நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நினைத்திருக்கும் கோயில்....
நான் பல பதிவுகள் வைச்சிருக்கேன் பாருங்க...காணொளி இன்னும் எடிட் பண்ணி அப்லோட் பண்ணாம...அப்படியே இருக்கு...
கீதா