25 March 2018

ஸ்ரீ ராம நாம மகிமை.. ..


ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் 
நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். 

அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.





 சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால்  ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். 

இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.

 உடனே ...அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். 

அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. 

ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை.

 அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது என்று.




சர்ஜாபூர் ,பெங்களூர் 


ராம நாமத்தின் மகிமை :



உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம்.

ராமா என்று ஒருமுறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்.

ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன.

ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. .

ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி,

 ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார்.

 அவர் மனதிலும்  ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார்.

 அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது.

 ராமபிரானுக்கு வருத்தம். 

இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என யோசித்தார்.

ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்தாயா.... 

நான் போட்ட கல் மட்டும் ஏன் அங்கு அமரவில்லை என்றார்.

அதற்கு ஆஞ்சநேயர் ..

ப்ரபோ ! எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன.

 அவை சரியாக அமர்ந்தது.

 நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்.

ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது.
ராமநாமம் மிகவும் அற்புதமானது.

ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம்.




துறையூர்



ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், 
காட்டில் வாழ்ந்த போதும், 
தாகத்திற்கு 

நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். 

அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாக இன்று படைக்கப்படுகின்றது.



பெங்களூர்




''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம்)



(312)

முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டுஉன்

அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த

படியில் குணத்துப் பரதநம் பிக்குஅன்று

அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.

-பெரியாழ்வார்



ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் 






அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. ஸ்ரீராம் ஜெய ஜெய ராம்.

    ReplyDelete
  2. நல்லதொரு கதை அனு! இது இதுவரை கேட்டதில்லை....மிக்க நன்றி பகிர்விற்கு..

    கீதா

    ReplyDelete
  3. ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்


    ராம நாம மகிமை கதை பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. ராமரைக் கண்டோம், மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  5. ராமநாம மகிமை நான் அறிந்திராததொன்று. நன்றி அனு.

    ReplyDelete