தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 March 2018

ரிப்பன் பக்கோடா / ரிப்பன் பார்டர்

இனிய காலை வணக்கம் ...


வாழ்க வளமுடன்...


இன்றைக்கு  ரிப்பன் பார்டர்...எளிய இனிய  சிற்றுண்டி...தேவையான பொருள்கள் -

கடலை மாவு -2 கப்

அரிசி மாவு   - 1 கப்

மிளகாய் தூள் -2 ஸ்பூன்

சூடான எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
செய்முறை -

அரிசி மாவு, கடலை மாவை  சலித்து..

 அதனுடன்  மிளகாய் தூள்,சூடான எண்ணெய்,  உப்பு  சேர்த்து பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்..

சூடான எண்ணெயில்.. ரிப்பன் பக்கோடா அச்சில் ..பிசைந்த மாவை போட்டு பிழிந்து விடவும்.
   
இருபுறமும் திருப்பி வேகவிட வேண்டும்..

சுவையான ரிப்பன் பக்கோடா / ரிப்பன் பார்டர் தயார்...அன்புடன்
அனுபிரேம்

12 comments:

 1. வீட்டில் செய்யச் சொல்லணும்.

  ReplyDelete
 2. நல்லதொரு குறிப்பு!

  ReplyDelete
 3. எளிமையான செய்முறையில் அருமையான சிற்றுண்டி..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. அழகா இருக்கு பார்க்க. ஈசியான செய்முறை..

  ReplyDelete
 5. அருமையான பக்கோடா செய்முறை.
  படங்கள் அருமை.
  சூடான எண்ணெய் அல்லது வெண்ணை சேர்த்து செய்யலாம் அல்லவா அனு?
  வெண்ணெய் சேர்த்தால் மெதுவாய் இருக்கும் என்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வெண்ணெயயும் சேர்க்கலாம் அம்மா....

   Delete
 6. ஈசியாதான் இருக்கும். செய்முறைய சுட்டுக்குறேன்

  ReplyDelete
 7. சூப்பரா இருக்கு அனு!!!

  ரிப்பன்
  தலைமுடி கட்ட மட்டுமா?
  நாவையும் கட்டும்
  இந்த ரிப்பன்
  தன்சுவையால்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் க்கா...

   உங்கள் வார்த்தை

   ஜாலத்தால்..

   என் மனதையும்

   கட்டி விட்டீர்கள்...

   Delete
 8. உங்கள் முத்தக்காவு பதிவு படித்த எஃபெக்ட்!!! ஹா ஹா ஹா ஹா

  முந்தியய பதிவில் தலைப்பு ஈர்க்கிறது!! ஹா ஹா

  கீதா

  ReplyDelete