28 March 2018

ஜில் ஜில் தர்பூசணி...

வணக்கம் நண்பர்களே...


கொளுத்தும் கோடைக்கு இதம் தரும் ஜில் ஜில் தர்பூசணி...இன்றைய பதிவில்...













ஜில் ஜில் தர்பூசணிக்கு தேவையானவை

தர்பூஸ் - 2 கப்,

 தேன்- 2 ஸ்பூன்,

 சர்க்கரை- 3 ஸ்பூன்,

 எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்




ஒரு முழு பழம் வாங்கியதில் மீதி கொஞ்சம் இருந்தது..அதை அப்படி  நறுக்கி  ப்ரீசரில் வைத்து விட்டேன்..

மறுநாள் ...




குளிர்ந்த பழத்துடன் தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு
சேர்த்து  மிக்சியில் கூழ் ஆகிக்கொள்ளவும் ..











பின் அதை மீண்டும் கிண்ணத்தில் இட்டு ப்ரீசலில் வைத்து..

2 மணி நேரம் கழித்து ஒரு முறை கிண்ட வேண்டும்...

பின் மீண்டும் ப்ரீசலில் ..




அடுத்த 6 மணி நேரம் கழித்து...மீண்டும் ஒரு முறை கிளறினால்...

ஜில் ஜில் தர்பூசணி ரெடி...





நன்றாக இருந்து...இது போல் இதற்கு முன் நான் சாப்பிட்டது இல்லை...இருப்பினும் ஐஸ்கிரீம் மாதரி இல்லை..😞

 ஐஸ்கிரீம் செய்யும் முறை தேடிய போது தான் இந்த முறை கிடைத்தது ..

இதற்கு பெயர் watermelon sorbet  (sorbet - sweet food made from fruit juice, water, and sugar mixed together and frozen)

மேலும் உங்களுக்கு தெரிந்த எளிய  ஐஸ்கிரீம் செய்யும் முறைகள் பகிர்ந்தாலும் நலமாக இருக்கும்...


அன்புடன்
அனுபிரேம்






8 comments:

  1. அழகான படங்கள்.
    அருமையான ஜில் ஜில் தர்பூசணி.
    பாரதி பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அழகிய புகைப்படங்கள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தன. நல்லதொரு குறிப்பிற்கு நன்றி!!

    ReplyDelete
  3. சூப்பர் அனு!! ஆமாம் இது சொர்பத்....இதில் எங்கள் வீட்டுல முன்னாடி மகனின் கஸின்ஸ் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க இல்லியா சம்மர்ல/ அப்ப எனக்கு கூடுதல் எனக்குக் குறைவுனு சண்டை வரும் நு நான் என்ன பண்ணுவேன் இப்படிப் பழக் கூழை ஃப்ரீசட் ட்ரே இருக்கும்ல சின்ன சின்ன க்யூப் சைஸ்ல அதுலயோ இல்லைனா குல்ஃபி சைஸ் அச்சு டப்பாலயோ போட்டு மூடி வைச்சுருவேன். எத்தனைபேரோ அத்தனை குல்ஃபி அச்சு டப்பா....மீண்டும் மீண்டும் அடித்து கடைசி ரவுன்ட்லதான் குஃப்ஃபி மோல்டுக்குள்ள...அப்ப ஒரு ஐச் குச்சியும் செருகி வைச்சுருவேன்...சண்டை வராது..ஹா ஹா ஹா..

    அப்புறம் இதோட க்ரீம் கலந்து அடிச்சு குல்ஃபி மோட் அல்லது கிண்ணத்துல வைச்சாலும் சூப்பரா இருக்கும் ஆனா எலுமிச்சை பிழியக் கூடாது. வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

    கீதா

    ReplyDelete
  4. எளிமையான செய்முறை.

    ReplyDelete
  5. ஆஹா.... சுலபமானதாகத் தான் இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. ஜில்ஜில் தர்பூசணி அடிக்கிற வெயில் நேரம் சாப்பிட ஸ்..ஸ்,ப்பா நல்லாயிருக்கும். இங்கு குளிரு இன்னும் முடியல. சம்மரில் செய்து பார்க்கிறேன். படங்கள் அழகா இருக்கு. நன்றி அனு

    ReplyDelete
  7. கோடைக்கு ஏற்ற குளிர்ச்சி.

    ReplyDelete