01 April 2023

ஏக ஸ்லோக இராமாயணம்

 மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர்  ...











ஏக ஸ்லோக இராமாயணம் - காஞ்சி மகாபெரியவர் அருளியது

காஞ்சி பெரியவரால் அருளி செய்யப்பட மிக எளிய அற்புதமான...  கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான  ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய  ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம்  இந்த  ஏக ஸ்லோக இராமாயணம்.


பழத்தை பிழிந்து சாற்றை அருந்துவது போல, மொத்த இராமாயணமும் ஒரே ஒரு சிறிய ஸ்லோகத்தில் இருப்பது தான் இந்த ஏகஸ்லோக ராமாயணம்.


சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.


ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்தகரம்

அங்குல்யாபரண சோபிதம்

சூடாமணி தர்ஸன கரம்

ஆஞ்சநேய மாஸ்ரயம்

வைதேகி மனோ கரம்

வானர தைன்ய சேவிதம்

சர்வ மங்கள கார்யானுகூலம்

சததம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.







 பெரிய திருமொழி
10 -3. ஏத்துகின்றோம் 
இராமாவதார ஈடுபாடு 


ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல்*  எங்கள் இராவணனார்-

ஓடிப்போனார்,*  நாங்கள் எய்த்தோம்*  உய்வது ஓர் காரணத்தால்*

சூடிப் போந்தோம் உங்கள் கோமான்*  ஆணை தொடரேல்மின்* 

கூடிக் கூடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே. 9

1876




வென்ற தொல் சீர்த் தென்இலங்கை*  வெம் சமத்து*  அன்று அரக்கர்-

குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*

கன்றி நெய்ந்நீர் நின்ற வேல் கைக்*  கலியன் ஒலிமாலை*

ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)

1877

























ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



அன்புடன் 
அனுபிரேம் 💖💖


No comments:

Post a Comment