26 April 2023

சுவாமி ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு..

ஸ்ரீரங்கம்    ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு.....











திருவல்லிக்கேணியில் சுவாமி இராமானுஜர்....









இராமானுஜ நூற்றந்தாதி

7
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,*  வஞ்ச முக்குறும்பு ஆம்- 
குழியைக் கடக்கும்*  நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* 
பழியைக் கடத்தும்  இராமானுசன் புகழ் பாடி*  அல்லா- 
வழியைக் கடத்தல்*  எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே.  (2)

2797
          

   8
வருத்தும் புற இருள் மாற்ற,*  எம் பொய்கைப் பிரான் மறையின்- 
குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 
இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே.    

2798


          

   9

இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட*  ஞானம் என்னும்- 
நிறை விளக்கு ஏற்றிய*  பூதத் திரு அடி தாள்கள்,*  நெஞ்சத்து- 
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்* 
மறையினைக் காத்து*  இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.       

2799

          

   10

மன்னிய பேர் இருள் மாண்டபின்*  கோவலுள் மா மலராள்- 
தன்னொடும் ஆயனை*  கண்டமை காட்டும்*  தமிழ்த்தலைவன்- 
பொன் அடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்* 
சென்னியில்  ​சூடும்*  திருவுடையார் என்றும் சீரியரே.     

2800



முந்தைய பதிவுகள்...






உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. சுவாமி ஸ்ரீ ராமானுஜரை தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. எம்பெருமானாரின் திருவடிகளே சரணம்.

    அவர் பார்த்த உற்சவர்களில் ஒரு படமாவது போட்டிருக்கலாம் (திருநாராயணபுரம் அல்லது ஸ்ரீபெரும்புதூர்....இல்லை ஸ்ரீரங்கத்தில் உள்ள சரம உருவம்.

    ReplyDelete