சம்பத்குமாரன் ( செல்லப்பிள்ளை) யதிராஜரின் இளவல்.
ராஜா ராமானுஜர், சம்பத்குமாரன் இளையராஜா ஆவார்.
இந்த பெருமாளுக்கு ராமப்ரியன் என்று திருநாமம்.
இஷ்வாகு குலா தனமான ஸ்ரீரங்கநாதனை, விபீஷணன் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றவுடன், ராமன் தான் ஆராதனம் செய்ய மீண்டும் ஒரு பெருமாளை எழுந்தருளப் பண்ணினார். ராமனால் ஆராதிக்கப்பட்டு, ராமனுக்கு மிகவும் பிரியமான பெருமாள் என்பதால் ராமப்ரியன் என்று திருநாமம்.ராமனுக்கு அடுத்து வந்தவன் ராமப்ரியன், ராமனுக்கு அனுஜன் ஆகையால் ராமப்ரியன் ராமானுஜன். பின்னர் கிருஷ்ணனால் யாதவகிரியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவரே.
ராமனின் பேத்தி கனகமாலினி (கனகாங்கி) என்று பெயர்.
யது வம்சத்து யதுத்தமனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான் குசன்.
குசன் பெண் விட்டு சீதனமாக ராமப்ரியனை ஆராதனம் செய்ய அளித்தான்.
இப்படி யது வம்சத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளை, பலராமன் தீர்த்தயாத்திரை சென்ற போது, யாதவ கிரியில் மூலவர் திருநாராயணன் திருஉருவமும் ராமப்ரியன் திருஉருவமும் ஒன்றாக இருப்பதைக் கண்டு, கண்ணன் அனுமதியுடன் ராமப்ரியனை திருநாராயணபுரத்தில் ப்ரதிஷ்டை செய்தார்கள்.
ராமனுக்கு பிறகு அவதாரம் செய்ததினால் ராமப்ரியன் ராமானுஜன்.
யதிராஜனான ராமானுஜர் ராமன் என்றால், யுவராஜாவான சம்பத்குமாரன் ராமானுஜன்.
சேமநல்வீடும் பொருளும்தருமமும் * சீரியநற்
காமமுமென்றிவை நான்கென்பர் *நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.
40 3816
மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்
அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே
நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
41 3817
ஆயிழையார்கொங்கைதங்கும் *அக்காதலளற்றழுந்தி
மாயும் என்னாவியை வந்தெடுத்தான்இன்று *மாமலராள்
நாயகன் எல்லாவுயிர்கட்கும்நாதன் அரங்கனென்னும்
தூயவன் * தீதிலிராமானுசன்தொல்லருள்சுரந்தே.
42 3818
தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
ReplyDelete