21 April 2018

சுவாமி இராமானுஜர் -உடையவரின் உயர்ந்த பக்தி நிலை


இன்று உடையவர் திருநட்சத்திரம்..சித்திரையில் திருவாதிரை

எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)


அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!

















உடையவரின் உயர்ந்த பக்தி நிலை 

திருவரங்கத்தில் ஒருமுறை சுவாமி ராமானுஜர் பிட்சைக்காக சென்று கொண்டிருந்தார். காவிரிக்கரை மணலிலே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிலர் மணலிலே அரங்கனைப்போல் உருவத்தைக் கீறி "உடையவரே! உங்கள் பெருமாள் பார்த்தீரா?' என்றழைத்துக் காட்டினர்.



விவரம் தெரியாத அந்த சிறிய குழந்தைகளின் மணல் விளையாட்டுக்கும், பெருமாளுக்கும் மரியாதை கொடுத்து பிட்சை பாத்திரத்தைக் கீழே வைத்து விட்டு பக்தியோடு விழுந்து வணங்கிய மகான்.




மற்றொரு முறை ஓரிடத்தில் சில சிறுவர்கள் கோயிலிலே அன்றாடம் நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளை விளையாட்டாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பிரசாதம் சமைத்து பெருமாளுக்கு படையலிட்டு அனைத்துத் தரப்பினருக்கும் விநியோகிக்கும் செயலை விளையாட்டாகச் செய்து கொண்டிருந்தனர்.








அப்போது பிட்சை ஏந்திக் கொண்டு அவ்விடம் வந்து கொண்டிருந்தார் ராமானுஜர். கோயிலில் அழைப்பது போல் "எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும்!' எனக் குரல் கொடுக்கவே தன்னை மறந்து அங்கே பெருமாள் எழுந்தருளியிருப்பதாகக் கருதிக் கொண்டு கீழே விழுந்து வணங்கி, அந்த மணல் பிரசாதத்தினை பவ்யமாக பிட்சைப் பாத்திரத்தில் ஏந்திக் கொண்டார் ராமானுஜர்.


பக்தியின் உச்சகட்டம் இது!










(2791)

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்

நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


(2792)

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்

கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்

விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்

உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.



(2793)

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்

பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்

சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

-திருவரங்கத்தமுதனார்



ஓம் நமோ நாராயணா..

உடையவர் திருவடிகளே சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்..








5 comments:

  1. படங்கள் அழகு. தகவல்கள் சிறப்பு.

    நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் அருமைப்பா...

    ReplyDelete
  3. ராமானுஜருடன் வலம் வந்தோம்.அருமை.

    ReplyDelete
  4. ராமாநுஜர் பற்றிய தகவல்கள் அருமை சகோ/அனு

    ReplyDelete