வணக்கம் ..
வாழ்க நலம்..
இது வரை இந்த புத்தக அலமாரியில் சில புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளேன்..
அவை விமர்சனம் அல்ல..எனது வாசிப்பு அனுபவம்..😊😊😊
அந்த வரிசையில் இன்று காணப்போவது...
என் காதல் ஒரு வேள்வி..
ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் ..
இக்கதை இன்னும் புத்தகமாக வரவில்லை..விரைவில் வரும்.....
ஆனால் புத்தம் புது கதை...
சிலநாள் முன்னே முடிவுற்ற புத்தம் புது மலர்..
இப்பொழுது இணையத்தில் பல பல கதைகள் எழுத்தாளர்களின் விருந்தாகவே நமக்கு கிடைகிறது..
அவ்வாறு வாசிக்க பட்ட ஒரு இனிய கதை...
கதைக்கு முன் அதன் ஆசிரியர்...விஜயஸ்ரீ பத்மநாபன்..
இது இவரின் ஏழாவது நாவல்...
இவரது நாவல்கள் அனைத்தும் இயல்பு வாழ்க்கையின் பிரதிநிதிகள்.
என் காதல் ஒரு வேள்வி..
நாயகன் - இளமாறன்
நாயகி -அனு ரேகா
இதில் நாயகி வளரும் காலத்திலே கனவுகளுக்காவும் , இலட்சியதிர்க்காவும் மிக கடுமையான முயற்சிகளுடன் ...வாழ ஆரம்பிக்கிறாள்...
பின் சில பல காரணங்கள் தனது லட்சியத்தை விட்டு வாழும் சூழல்.... தன் காதலை வேள்வியாக எண்ணி வாழ்கிறாள்...பின் வாழ்க்கையின் போக்கில் ஒரு குடும்ப தலைவியாக மாறுகிறாள்..
பின் முழுவதும் குடும்பதிர்காக என்று மட்டுமே வாழும் அன்பு உள்ளம்..
இது இன்றைய நிதர்சனம்....
எதில் நிறைவு,
எதில் மகிழ்ச்சி,
எது தேவை ...
என்பது நம் கண்ணோட்டத்தில் மட்டுமே...
உண்மையில் அனு தன் வாழ்க்கை பயணத்தை வேறு மாதரியும் கொண்டு சென்றிக்க முடியும்....
ஆனால் இவள் குடும்பம் என்னும் மையத்தில் வாழ்த்து நிறைவு பெரும் பாத்திரம்..
மிக எதார்த்தம்,,இன்றைய நிலையில் பல வீடுகள் இப்படித்தான்...
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் ..குடும்பத்திற்காக கனவுகளை தியாகம் செய்கிறார்கள்..
அந்த தியாகம் மறக்காமல் போற்ற படும் போதே ..அவர்களுக்கு ஒரு சிறு மகிழ்வு கிடைக்கும்...
நிச்சியம் நம்மை சார்ந்தவர்களுக்கு நாம் அதை செய்ய வேண்டும்...😍😍 என்ற ஆர்வத்தை தூண்டுகிறார்...
மிக எளிய எதார்த்த கதை....அருமை
மேலும் எங்கும் நேர்மறை எண்ணங்கள்...
இக்கதை மாந்தர்கள் அனைவரும்...மிக அழகு..
மிக பாசமான மாமியாரும்,
அன்பான அம்மாவும்,
பலன் எதிர்பாராத நட்பும்,
அன்பு சுற்றமும் என்று
மனதிற்கு நிறைவை தரும் கதை...என் காதல் ஒரு வேள்வி..
மேலும் மேலும் இது போல் பல கதைகளை நம் விஜி ப்ரோ படைத்திட எனது அன்பு வாழ்த்துக்களும்...
அன்புடன்
அனுபிரேம்...
விஜியை நானும் வாழ்த்திக்குறேன்
ReplyDeleteநன்றி..ராஜி ம்மா...வாழ்த்துக்கள்❤❤❤
DeleteWow... wow.. அனும்மா...!haha...over... but sweet
ReplyDeleteநன்றி தவிர வேறென்ன சொல்ல டா...!முடில...eee
உங்கள் அன்பெல்லாம் வரம்...பா..
மிக்க நன்றி சகோ/அனு ஒரு எழுத்தாளர், புதிய தளம் பற்றி அறியத்தந்தமைக்கு. தளத்தையும் நோட் செய்து கொண்டுவிட்டோம். வாழ்த்துகள் கதாசிரியருக்கு!
ReplyDeleteநன்றி bro...
Deleteவாழ்த்துக்கள் ..❤❤❤
புதிய அறிமுகம்... நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் கதாசிரியருக்கு.
ReplyDeleteவிமர்சனம் அருமை.
அனுரேகா.... அனுபிரேம்.... டவுட்டூ டவுட்டா வருகுதே எனக்கு:).
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நல்லதொரு விமர்சனம்.
ReplyDeleteதளத்தினையும் பார்த்தேன். வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு.
நன்றாகவிருக்கிறது வாழ்த்துக்கள்..
ReplyDeleteவணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US