21 April 2021

சேரகுலவல்லி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ....

 சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..




நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார்.....

பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி.

பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி. 

சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி.


ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார். இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.

சில கட்டங்களில் மெய்மறந்து, கொதித்தெழுந்து தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்.  

" இராம ” என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. 

அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது.






குலசேகரஆழ்வாரின் திருமகள் சேரகுலவல்லி தாயார் , நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன்.

 இன்று, இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!


இத்தாயாரின் சன்னிதி கோயில் அர்ஜுன மண்டத்தின் வடமேற்கில் உள்ளது.

இன்று ஒரு  நாள் மட்டுமே தாயார் வெளியில் சேர்த்திக்காக எழுந்தருளுவார்.... மற்ற நாட்களில் வெளியிலிருந்தே சேவிக்க முடியும் மற்ற தாயாரை போல் இவருக்கு எந்த உற்சவங்களும் கிடையாது.... சேர்த்தி ஒன்று மட்டுமே.







பெருமாள் திருமொழி
பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின்


ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம்




தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரம் துறந்து * துறைக்கங்கைதன்னைப்
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து *
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.

4 744


வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்தனுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மறியஎய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பிஏத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.

5 745


பெருமாள் திருவடிகளே சரணம் !!

தாயார்  திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக !!


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல தெளிவாக சேரகுலவல்லி எம்பெருமான் சேர்த்தி சேவை பற்றி சொல்லியுள்ளீர்கள். இராம நாமத்தின் மகிமை அளவில் அடங்காதது. படங்கள் அருமை ஸ்ரீரங்கத்து எம்பெருமானையும், தாயாரையும் கண்குளிர வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. படங்கள் அழகு. தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. படத்தை நான் டெலெகிராப் அப்ளிகேஷனிலும் பார்த்தேன்.

    சேரர்குலவல்லி மிக அழகு.

    உங்க சில பதிவுகளுக்கு வர முடியலை. எல்லாம் நான் விரும்பும் பதிவுகள்

    ReplyDelete