09 May 2019

சுவாமி இராமானுஜர்

உடையவர் திருநட்சத்திரம் -  சித்திரையில் திருவாதிரை

சுவாமி  இராமானுஜர்  1003 ஆம் திருநட்சித்திரம்   - இன்று











எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)



அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!







உயிர்க்குலம் அனைத்துக்குமான காருண்யத்தை, தமக்குள்ளே நிரப்பிக் கொண்டு உலாவிய ஆசார்ய மகாபுருஷர், உடையவர்!

அரங்கத்தில் அரவணையில் பள்ளி கொண்ட அரங்கநாதனின் திருவாக்காக, ஸ்ரீமத் ராமானுஜருக்கு அமைந்த திருநாமம் இது!


என் பகவான், என் கடவுள் என்று சொல்லிக் கொள்வதில், எல்லாருக்குமே ஒரு ஆனந்தம், பிடிப்பு, நிறைவு இருக்கிறது.

ஆனால், அந்த பகவான், ‘தம்முடையவன்’ என்று நம்மைக் குறிப்பிடுகிறானா? அப்படிச் சொல்லும் வகையில் நம் எண்ணமும், பேச்சும், செயல்களும் இருக்கிறதா? இதற்கு,

‘ஆமாம்’ என்று சொல்லும் வலிமை, நமக்கு இருக்கிறதா?

ஆனால், பகவானே ராமானுஜரை ‘உடையவர்’ என்று அழைத்தார்..



இறைவனிடம் காப்பாற்றுதல், தண்டித்தல் என்கிற இரண்டு நிலைகள்தான் உண்டு.

ஆனால், ஆசார்யர்கள் தம் அளப்பரிய காருண்யத்தால், பக்தர்களை மேம்படுத்தி பகவானின் அருளுக்கு உரியவராக்குகிறார்கள்.

பலாப்பழத்தின் தோல் நீக்கி, பிசின் அகற்றி, கொட்டையை விலக்கி சுளையை தேனில் தோய்த்து ஊட்டும் அன்னையின் மனோபாவம் இது!



தம் அடியார்களிடம் காணப்படும் கோபம், பொறுமையின்மை, சஞ்சலம், சந்தேகம், ஆசை, சபலம்... என்ற குணக்கோளாறுகளை விலக்கி, சீராக்கி, நேராக்கி, பகவானிடம் சேர்ப்பிக்கிறார்கள் ஆசார்யர்கள்.

கண்ணில் புரை... விழித்திரையில் ஏற்பட்டுள்ள அந்தப் படலத்தை, அறுவை சிகிச்சை செய்து அகற்றுகிறார்கள் மருத்துவர்கள்.

மறைப்பு நீங்கியதும், விழித் திரையில் வெளிச்சம் படிக்கிறது.

பார்க்கின்ற பொருள்களின் வடிவம் தெரிகிறது  இது மருத்துவம்.

இதேபோல, அக்ஞானம் என்கிற படலம், நம் மனத்தை, அறிவை மூடியிருக்கிறது.

அதை ஞானம் என்னும் மையைப் பூசி, அகற்றுகிறார் ஆசார்யர்.

இதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது ‘மை’ என்பதும் கருப்புதான்.

ஆனால், இது அருள்! அதனால்தான், பகவான் கார்வண்ணமாக, மழைவண்ணமாக கரிய திருமேனியனாக தோற்றமளிக்கிறான் என்பதும் புரிகிறது.






 அப்படி, தம் அடியார்களுக்கு ஞானமளித்து வழிப்படுத்துவதாலேயும்,  ‘உடையவர்’ என்கிற சொல்லால், அளப்பரிய காருண்யமே வடிவாக உடையவர் என்கிற சூட்சுமத்தை உணர்த்துகிறான் அரங்கன்.


 இதுமட்டு மல்ல , இன்னும் பல திருநாமங்கள் உண்டு இவருக்கு.


இளையாழ்வார்:

ஆதிசேஷனின் அம்சமாக, 1017ல், சித்திரை மாதம், சுக்லபக்ஷ வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் நட்சத்திரம், கடக லக்னத்தில் அவதரித்தவர் ஸ்ரீ இராமானுஜர்.

தாய்மாமன் பெரிய திருமலை நம்பி இவருக்கு சூட்டிய பெயர் இளையாழ்வான்.


எதிராஜன்:

ஸ்ரீ இராமானுஜர் துறவு மேற்கொள்ள முடிவு செய்தபொழுது, காஞ்சி வரதராஜப்பெருமாளே, ‘வாரும் எதிராஜரே’ என்று அழைத்தார்.


இராமானுஜன்:

மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி இராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்தார். அப்பொழுது, அவர் இட்ட திருநாமம் இராமானுஜன்.


எம்பெருமானார்: 

அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி, ‘இதைப் பிறருக்குச் சொல்லாதே. சொன்னால் உனக்கு நரகம்’ என்றார். ஆனால், இவரோ தான் ஒருவன் நரகம் போனாலும், கேட்கும் ஆசையுடைய எல்லாரும் கேட்டு நற்கதி பெறட்டுமே என்று, அந்த மந்திரத்தை எல்லோர்க்கும் அருளினார்.

அதையறிந்த நம்பி, உடையவரை வாரி அணைத்து, ‘நீர் சாட்சாத் அந்த எம்பெருமானேதான்’ என்று கூற, இராமானுஜர் எம்பெருமானார் எனப்பட்டார்.


பாஷ்யகாரர்:

பிரம்ம சூத்ரத்துக்கு விசிஷ்டாத்வைத வழியில் இராமானுஜர் விரிவுரை எழுதினார். அந்த விரிவுரைகளைக் கேட்ட ஸ்ரீ சரஸ்வதிதேவி, இவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ எனும் திருநாமம் சூட்டினார்.


திருப்பாவை ஜீயர்: 

அக்காலத்தில் துறவிகள், தாம் உண்பதற்குப் போதுமான உணவுப் பொருட்களை, மாதுகாம் அல்லது உஞ்சவிருத்தி எனப்படும் முறையில், வீதிகளில் ‘உபநிஷத்’களைச் சொல்லிக் கொண்டு செல்வர். அதேபோன்று இவர் உபநிஷத்தின் சாரமான திருப்பாவையைச் சொல்லிக்கொண்டு செல்வார்.

இதனால் ‘திருப்பாவை ஜீயர்’ என்று திருநாமம் உண்டானது.


கோயில் அண்ணன்: 

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ சுந்தரராஜனுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறு தடா வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டாள் ஆண்டாள்.

 ஸ்ரீ இராமானுஜர் அழகர் கோயிலுக்கு வந்து, ஸ்ரீ ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

அதனால், ஸ்ரீ ஆண்டாள் தன் விக்ரக ரூபத்திலேயே, ‘வாரும், என் அண்ணன் அல்லவோ’ என்று அழைத்தாள். அதனால், ‘கோயில் அண்ணன்’ என்று திருநாமம்.

இப்படி நாமமாயிரம் கொண்டு திகழ்பவர் ஸ்ரீமத் ராமானுஜர் என்ற போதிலும், உடையவர் என்கிற திருநாமமே அனைத்திலும் மேம்பட்டு விளங்குகிறது.

பகவான் ‘உடையவர்’ என்று அவரைக் குறிப்பிட்டதால் மட்டும் அல்ல;  ‘நம்மை உடையவர்’ என்று அவரிடம் நாம் சரணாகதி செய்வதால்.

 பகவானுக்கு நெற்றிக்கோடு இட்டவர், நமக்கு பற்றுக்கோடாய் விளங்குகிறார் - தம்முடைய அர்ச்சாவதார திருமேனியில்!


(இணையத்திலிருந்து )



திருவரங்கத்தமுதனார் அருளிய 
இராமாநுச நூற்றந்தாதி

12

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போது

அடங்குமிதயத் திராமானுசன், அம்பொற்பாத மென்றும்

கடங்கொண்டிறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யாத்

திடங்கொண்டஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே.


13

செய்யும் பசுந்துளவ த்தொழில்மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்து

ஐயன் கழற்கணியும்பரன் தாளன்றியாதரியா

மெய்யன் இராமானுசன் சரணேகதி வேறெனக்கே.



14

கதிக்குப்பதறி  வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவஞ் செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமானுசன்என்னைச் சோர்விலனே.















ஓம் நமோ நாராயணா..

உடையவர் திருவடிகளே சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்..

10 comments:

  1. //பகவானுக்கு நெற்றிக்கோடு இட்டவர், நமக்கு பற்றுக்கோடாய் விளங்குகிறார் - தம்முடைய அர்ச்சாவதார திருமேனியில்!//
    வாழ்வில் பற்றுக்கோடு இல்லையென்றால் வாழமுடியாதே!
    ஏதாவது பற்றுக் கோடு வேண்டும். பற்றுவோம் பரமனடி.

    மிகவும் அழகாய் அருமையாக எழுத பட்ட பதிவு அனு.
    வாழ்த்துக்கள்.

    படங்கள் எல்லாம் மிக அழகு.

    ஓம் நமோ நாராயணா..

    உடையவர் திருவடிகளே சரணம்..!

    ReplyDelete
  2. ராமானுஜரை பற்றி இன்றுதான் அறிந்தேன்

    ReplyDelete
  3. படங்களின் வழி தரிசனம் கிடைக்கப் பெற்றோம் அனு.

    கீதா

    ReplyDelete
  4. படங்கள் அருமை. தரிசனமும் அருமை.

    இராமானுச நூற்றந்தாதி பாடல்கள் சிறப்பு. அர்த்தத்தை அறிந்து மனம் பரவசமடைகிறது

    ReplyDelete
  5. Great job for publishing such a beneficial article. Your blog information isn’t only useful but it is additionally creative with high content too. Need your blessing Swamy..Thanks..
    dealstoall

    ReplyDelete
  6. இராமனுஜர் பற்றி அறிந்துகொண்டேன். படங்களும் அழகா இருக்கு.கடைசி படம் ரெம்ப அழகு.

    ReplyDelete
  7. An impressive share!
    I have just forwarded this to a colleague who has been conducting a little homework on this.
    And he actually bought me breakfast simply because I discovered it for him... lol.
    So allow me to reword this...
    Thanks for the meal!!
    But yeah, thanks for spending time to talk about this matter here on your internet site.
    avast cleanup activation code
    ableton live crack
    winrar-pro crack

    ReplyDelete
  8. Great blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A design like yours with a few simple tweeks would really make my blog stand out.
    Please let me know where you got your design. Bless you
    mixcraft pro studio crack
    teracopy
    metal slug apk

    ReplyDelete
  9. தங்கள் வலைத்தளத்தை பார்வையிட்டேன்,புதிய கட்டுரைகள் எழுதிட எனக்கு துணையாக இருந்தது.நான் https://tamilsolution.com/ என்ற வலைத்தளம் வைத்துள்ளேன்.உங்கள் இந்த கட்டுரையை வைத்து நான் ராமானுஜர் கட்டுரை எழுதியுள்ளேன் மிக்க நன்றி

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete