வாழ்க வளமுடன்
திருவரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் நடைபெறும்.
காலையில் அம்மா மண்டபத்திற்குப் பெருமாள் எழுந்தருளி அன்று முழுவதும் அங்குக் காட்சியளித்து பின் மாலையில் காவிரிக் கரையில் கஜேந்திர மோக்ஷம் நிகழ்ச்சி நடைபெறும்.
மிக சிறப்பான இந்நிகழ்வை காணும் பாக்கியம் இந்த வருடம் எனக்கும் கிட்டியது ...அதன் காட்சிப் பதிவுகள் இன்று ..
அம்மா மண்டபத்திலிருந்து பெருமாள் காவேரிக்கு எழுந்தருளும் போது ..
கடமையாய் பல புகைப்பட கலைங்கர்கள் |
ஓடையாய் காவேரியில் நீர் |
மண்டபத்திலிந்து கீழே வரும் இடத்தில் அவ்வளவு மக்கள் இல்லை ..எனவே பெருமாளுடன் நடந்து வந்து படம் எடுக்க முடிந்தது ... பல நாள் ஆசையும் நிறைவேறியது .
காவேரியில் கரு மேகங்களுடன் |
ஆண்டாள் யானை சந்தனம் மற்றும் சடாரி மரியாதை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு .
நன்றி - திரு .விஜயராகவன் அவர்களுக்கு |
பல குடும்பங்கள் உணவுடன் வந்து மகிழ்ந்த பொழுதுகள் .. |
வெண் புரவிகள் |
(408)
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.
மிக தாமதமான பதிவு தான் ...ஆனால் மனதிற்கு நிறைவான காட்சிகள் கொண்ட பதிவு ...
அன்புடன்
அனுபிரேம்
மனது நிறைந்து விட்டது உணமை.
ReplyDeleteஅருமையான தரிசனம்.
உங்கள் உதவியில் எங்களுக்கும் அந்தக் காட்சிகள் கிட்டியது. அழகிய புகைப்படங்கள்.
ReplyDeleteபுகைப்படங்கள் முலம் கஜேந்திர மோக்ஷம் பார்த்தாச்சு!! புகைப்படங்கள் நல்லாருக்கு.
ReplyDeleteஆண்டாள் மற்றும் வெண் புரவிகள் வெகு அழகு!
கீதா
கஜேந்திரனோடு எனக்கும் மோட்சம் கிடைத்தது
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமிக அழகான படங்கள். கஜேந்திர மோக்ஷம் படங்கள் விளக்கங்களுடன் மிக அருமையாக உள்ளது. பெருமாள் தரிசனம் சிறப்பாக கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெகு அழகான படங்கள்.. விரிவான செய்திகள்..
ReplyDeleteஇனிய இளங்காலைப் பொழுதில் தெய்வீக தரிசனம்..
வாழ்க நலம்...
இனிய தரிசனம்.
ReplyDeleteதலைப்பைப் பார்த்து கபிஸ்தலமோ என நினைத்தேன்.
ReplyDeleteநல்ல தரிசனம்.
உங்க பதிவினால் நானும் தரிசனம் செய்தாயிற்று. சில படங்கள் ரெம்ப அழகு.(6,13,23,25,26,27 படங்கள்)
ReplyDelete