23 May 2019

முருங்கைக் கீரை பொடி


வாழ்க வளமுடன்



மிக எளிய இனிய உணவு இன்று ...முருங்கைக் கீரை  பொடி



தேவையானவை 



 முருங்கைக் கீரை - 2 கப்

எள்ளு        - 3 ஸ்பூன்
உளுந்து   - 3 ஸ்பூன்
க.பருப்பு   -3 ஸ்பூன்

பூண்டு             - 5 பல்
வர மிளகாய்  - 8

பெருங்காயம் - சிறிது
உப்பு






செய்முறை- 

முருங்கைக் கீரையை  ஆய்ந்து , நன்கு சுத்தம் செய்து விட்டு,   உலர்த்தி   வைத்துக் கொள்ளவும்.

பின் வெறும் வாணலியில் உலர்ந்த முருங்கைக் கீரையைப்  போட்டு ( சில வினாடிகள் மட்டுமே) லேசாக வறுத்துக் கொள்ளவும்.

எள்ளு , க.பருப்பு , உ. பருப்பு , பூண்டு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் அனைத்தையும் தனி தனியாக   சிவக்க வறுக்கவும்.

பின் அவற்றை ஆற விட்டு உப்பு சேர்த்து கீரையுடன்  அரைக்க ...முருங்கைக் கீரை  பொடி தயார் ...







சூடான சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும் ....



அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. நானும் இந்த மாதிரி ஒருவர் சொன்னதை எழுதி வைத்து இருக்கிறேன். இன்னும் செய்து பார்க்கவில்லை.
    மிக அருமையாக பச்சை பசேல் என்று இருக்கிறது கீரை பொடி.

    ReplyDelete
  2. புதுசா இருக்கே... செய்து பார்க்கலாம். எல்லாமே எளிதில் கிடைக்கும் பொருள்கள்.

    ReplyDelete
  3. கீரை வகைகள் எனக்கும் பிடித்தமானது.

    ReplyDelete
  4. கறிவேப்பிலைபொடி சாப்பிட்டிருக்கேன். இது கேள்விபடல. புதுசா இருக்கு. முருங்கைகீரை கிடைத்தால் கூட்டு,பொரியல்தான் செய்வேன். முயற்சிக்கிறேன் இனி கிடைத்தால். பார்க்க நல்லாயிருக்கு பொடி.
    பாரதி வரிக்கு நீங்கபோடும் படங்கள் அழகா இருக்கு அனு.

    ReplyDelete