வாழ்க வளமுடன்
இன்றைய சுவையான பதிவில்.....பட்டர் முறுக்கு
தேவையானவை -
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு -1/2 கப்
வெண்ணெய் - 3 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை
அரிசி மாவு மற்றும் கடலை மாவை சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெய்யை உருகும் வரை சூடாக்கவும்.
பின் சலித்த மாவில் பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் உருகிய வெண்ணெய்யை சேர்க்கவும்.
கை விரல்களால் சீராக கலந்துவிடவும்.
பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கி, மாவை நேரடியாக முறுக்கு அச்சில் விட்டு பிழியவும்.
அவ்வப்போது திருப்பிவிடவும். மிதமான தணலில் சத்தம் அடங்கும் வரை பொரிக்கவும்.
சுவையான பட்டர் முறுக்கு ரெடி .
இன்றைய சுவையான பதிவில்.....பட்டர் முறுக்கு
தேவையானவை -
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு -1/2 கப்
வெண்ணெய் - 3 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை
அரிசி மாவு மற்றும் கடலை மாவை சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெய்யை உருகும் வரை சூடாக்கவும்.
பின் சலித்த மாவில் பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் உருகிய வெண்ணெய்யை சேர்க்கவும்.
கை விரல்களால் சீராக கலந்துவிடவும்.
வெண்ணெய் சேர்த்து கிளரும் போது மாவுவின் பதம் இவ்வாறு இருக்க வேண்டும் |
பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கி, மாவை நேரடியாக முறுக்கு அச்சில் விட்டு பிழியவும்.
அவ்வப்போது திருப்பிவிடவும். மிதமான தணலில் சத்தம் அடங்கும் வரை பொரிக்கவும்.
சுவையான பட்டர் முறுக்கு ரெடி .
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான சுவையான முள்ளு முறுக்கு. செய்முறையும், படங்களும் கண்களை கவர்கின்றன. நானும் இதைப்போலத்தான் செய்வேன். மிக அழகான செய்துள்ளீர்கள்.இதைப்பார்தவுடன் எனக்கும் செய்து பார்க்க ஆசை வந்து விட்டது. அதற்குள் தங்கள் செய்து வைத்த முள்ளு முறுக்கிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களின் அழகான கருத்திற்கு நன்றி மா...மிக மகிழ்ச்சி
Deleteமுள்ளு முறுக்கு அருமை. கறுப்பு எள் கொஞ்சம் சேர்க்கலாமோ?
ReplyDeleteசாதாரணமாக செய்யும் முறுக்கில் எள்ளு , சீரகம் , ஓமம் என்று ஏதேனும் ஒன்று சேர்ப்போம் ...வித்தியாசமாக இதில் ஒன்றும் சேர்க்காமல் செய்து பார்த்தேன் ...
Deleteஇதுவும் நன்றாகவே இருந்தது ...
சாஃப்ட் ஆக இருந்தால் சரி.. சீரகம், ஓமம் மிளகு என்று சேர்க்கலாமோ....
ReplyDeleteமிகவும் மென்மையாக இருந்தது ...
Deleteசாதாரணமாக செய்யும் முறுக்கில் எள்ளு , சீரகம் , ஓமம் என்று ஏதேனும் ஒன்று சேர்ப்போம் ...வித்தியாசமாக இதில் ஒன்றும் சேர்க்காமல் செய்து பார்த்தேன் ...
இதுவும் நன்றாகவே இருந்தது ...
அனு சூப்பர். ப்ரொப்போர்ஷனும் வேறு. கொஞ்சம் பொட்டுக்கடலை மாவும் சேர்த்துச் செய்வதுண்டு. நான் இன்னும் கூட கொஞ்சம் பட்டர் சேர்ப்பதுண்டு. அதாவது பட்டரை மாவுடன் சேர்த்து விரவினால் ப்ரெட் க்ரம்ப்ஸ் போல....வாயில் போட்டால் கரையும் என்று சொல்வாங்களே அந்த சாஃப்ட்...அரிசி மாவு கூடுதலாக னான் செய்யும் ப்ரொப்போர்ஷனில் எள்ளும் சேர்ப்பேன் அல்லது ஜீரகம் சேர்ப்பேன்.
ReplyDeleteஇந்தப் ப்ரொப்போர்ஷனை நாங்க முள்ளு முறுக்குனு சொல்லிப்போம் ஹிஹிஹி...அப்புறம் இதே போல மகிழம்பூ தேங்குழல் நு அது ஒரு ப்ரொப்போர்ஷன் இப்படி பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்ல...
உங்க முறுக்கு கொஞ்சம் எடுத்துக்கிட்டேன்...
எங்க வீட்டுல நல்ல போணியாகும். பையன் இல்லாததால, சென்னையிலும் இல்லாததால இப்ப எல்லாம் குறைஞ்சு போச்சு..
கீதா
பொட்டுக்கடலை மாவும் போட்டு செய்யலாம் கா..
Deleteஉங்க ஆர்வமான கருத்துக்கு மிகவும் நன்றி கீதாக்கா..
அருமையான முறுக்கு, ஆனா நீங்க கடலை மா அதிகமாக சேர்த்திருக்கிறீங்க.. நான் கடலை மாவின் பங்கு அரைப்பங்காக சேர்ப்பேன்.
ReplyDeleteஇந்த விகிதம் ஒவ்வொருவருக்கும் வேறுப்படும் அதிரா...
Deleteநமக்கு சுவைதானே முக்கியம் ..அது மிக சிறப்பு ..
பார்க்கவே நல்லாயிருக்கு இப்படியானதென்றால் இங்கு உடனே காலி. நானும் செய்துபார்க்கிறேன் அனு. எனக்கும் சுவைதான் முக்கியம்.
ReplyDelete