வாழ்க வளமுடன்
பூ மலர்ந்தது பூமிக்குதானே
படம்: அமராவதி
பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடதானே.
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே.....
(பூ மலர்ந்தது)
முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது.
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டால் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேர் உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே,
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது)
கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே....
(பூ மலர்ந்தது)
இப்படங்களும் cuppon park ல் எடுத்தவை ...
அன்புடன்
அனுபிரேம்
பூக்கள்தான் அருமை என்றால் கவிதை அதைவிட அருமை....
ReplyDeleteகவலை என்பது மனதின் ஊனமே,
ReplyDeleteபுதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே....//
அருமை.
மலர்கள் கண்டு மகிழ்ந்தேன்.
கண்ணைப்பறிக்கும் நிறங்களில் மலர்கள் மனதைக் கவர்கின்றன.
ReplyDeleteமலர்களின் அழகு மனதை நிறைத்தது!
ReplyDeleteமிக அருமை, கண்ணைப் பறிக்கும் அழகு... நானும் செவ்வந்தி வாங்கி நட்டுவிட்டேன் இவ்வருடத்துகானது.
ReplyDeleteஎன்ன அழ்கு அனு. அதுவும் கலர் காம்பினேஷன் வெள்ளை கரெக்ட்டா டிசைன் போட்டா மாதிரி நடுல...அப்புறம் ஜெவந்தி போல அந்தப் பூவுல ஃப்ரில்லில் இருப்பது போலனு வாவ்! என்ன காம்பினேஷன் இல்லையா...செமை இயற்கையின் படைப்பு. கண்ணையும் மனதையும் கவர்கிறது.
ReplyDeleteகீதா