வாழ்க வளமுடன்
புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்!
சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்!
வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே – நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்!
கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
அருகிலே ஒரு இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!
யுத்தம் காணாத பூமி – ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்.
மரணம் காணாத மனித இனம் – இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!
பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!
போனவை அட,போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..
தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!
அன்புடன்
அனுபிரேம்
அழகான மலர்கள். எனக்கு பிடித்த சினிமா பாடலில் இதுவும். பாரதியார் பாடல், படம் அருமை.
ReplyDeleteபடங்களில் உள்ள மலர்களின் அழகை வர்ணிக்க தமிழில் புது வார்த்தைகள் வேண்டும்!
ReplyDeleteஅருமையான பாடல். அழகான படங்கள்.
ReplyDeleteபாடலும், பூக்களின் படங்களும் அருமை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபூக்களின் அழகு மனதை ஈர்க்கிறது. மிக அழகான படங்கள். பாடலும் அதற்கு பொருத்தமாய் அழகாய் உள்ளது. பாரதியின் பாடலும் அருமை. அத்தனையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகு மலராட.....
ReplyDeleteபாலைவனம் பூக்க வேண்டும்....அருமை...
ReplyDeleteமலர்களே மலர்களே!! நு பாடணும் போல அத்தனை அழகு அனு...
ReplyDeleteஒவ்வொருத்தர் பதிவும் பார்க்கும் போது ஹையோ நம்மளோடது எத்தனை இருக்கு தூங்கிட்டு இருக்கு...எப்ப போட மனசு வருமோனு ஹிஹிஹிஹிஹி....அத்தனை சுணக்கம் இப்போதெல்லாம் பதிவு போட..
அத்தனைப் படங்களும் அழகு!!
கீதா