04 April 2019

பால் அல்வா

வாழ்க வளமுடன் 

இன்றைய சுவையான பதிவில் பால் அல்வா






தேவையானவை 

பால் - 2 கப்

சர்க்கரை - 3 ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்
ரவை - 2 ஸ்பூன்

தயிர் - 1 ஸ்பூன்

 ஏலக்காய் தூள் -1/8 ஸ்பூன்






செய்முறை 

ஒரு அடி கனமாக வாணலியில்  பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.... அதன் அளவு குறைந்து கொஞ்சம் திக்கா க வரவும் .. அதில் சர்க்கரை மற்றும் வறுத்த ரவையை சேர்த்து  கிளறவும் .








பால் கலைவை இன்னும் கெட்டியாக மாறும்... பின்  அதில் தயிர், ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறவும் ...















 அல்வா பதம்  வரும் வரை அடுப்பை மிதமாக வைத்து கிளற வேண்டும் ....சிறிது நேரத்தில் நெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தி ....  கிண்ணத்தில் பரிமாறினால்   சுவையான பால் அல்வா தயார்













கண்டு ரசித்தமைக்கு நன்றிகள் பல ...


அன்புடன்
அனுபிரேம்




8 comments:

  1. ஆசையை தூண்டுகிறது.

    ReplyDelete
  2. சுவைக்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  3. சுவையான பால் அல்வா தான். படங்கள், காணொளி எல்லாம் அருமை அனு.

    ReplyDelete
  4. ஆஹா... வாயூறுகிறது.

    ReplyDelete
  5. பால் அல்வா சூப்பரா இருக்கு அனு.படங்கள்,வீடியோ அருமை.

    ReplyDelete
  6. பால் அல்வா சூப்பர் அனு! ரொம்பப் பிடிக்கும்!

    கீதா

    ReplyDelete
  7. நல்லா வந்திருக்கு பால்கோவா..... ஆமாம் சிரமப் படறதுக்குப் பதிலாக இப்போல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா எல்லா இடத்திலும் கிடைக்குதே... 50 ரூபாயைக் கொடுத்தால் சட்னு வாங்கிடலாமே... ரொம்ப நேரம் கிளறுவதுதான் கஷ்டம்.

    ReplyDelete