19 April 2019

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

  மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்

 (சித்திரையில் – சித்திரை)........







மதுரகவி ஆழ்வார்  வாழி திருநாமம்!



சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே

திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே

உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே

ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே !



   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு .   ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார்.

ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார்.

மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.

நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். 

அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று


ஸ்ரீ  மதுரகவியாழ்வார் வைபவம் போன வருட பதிவு ...இங்கே 





(940)

நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்

புன்மையாகக் கருதுவராதலின்

அன்னையாய் அத்தனாய் என்னையாண்டிடும்

தன்மையான் சடகோபன் என்நம்பியே.





(941)

நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும்

நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்

செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.









(942)

இன்று தொட்டு எழுமையும் எம்பிரான்

நின்று தன்புகழ் ஏத்த அருளினான்

குன்றமாடத் திருக்குருகூர்நம்பி 

என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.






(943)

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான்

பண்டை வல்வினை பாற்றியருளினான்

எண்திசையும் அறிய இயம்புகேன்

ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.









(944)


அருள்கொண்டாடும் அடியவர் இன்புற

அருளினான் அவ்வருமறையின்பொருள்

அருள்கொன்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்

அருள்கண்டீர்  இவ்வுலகினில் மிக்கதே.







ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்...

3 comments:

  1. படங்களும் பதிவும் சிறப்பு.

    ReplyDelete
  2. சிறப்ப்பு, படங்கள் அருமை

    ReplyDelete
  3. ஓம் நமோ நாராயணாய நம!!
    மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

    படங்கள் அழகு.
    தரிசனம் செய்தேன் நன்றி.

    ReplyDelete