08 April 2019

புதுச்சேரி தாவரவியல் பூங்கா 2



வாழ்க வளமுடன் 


புதுச்சேரி தாவரவியல் பூங்காவின் வண்ண ஓவியங்களை போன பதிவில் பார்த்தீர்கள் ...இன்று புதுச்சேரி தாவரவியல் பூங்காவின் மேலும் சில காட்சிகள் ...




குழந்தைகளுக்கான தொடர்வண்டி

குழந்தைகளுக்கான தொடர்வண்டி1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  3 ஆம் தேதி துவங்கப்பட்டது .இந்த தொடர் வண்டி துவங்கப்பட்ட போது  இரண்டு பயனர் பெட்டிகள் மட்டுமே இருந்தன. .

 இந்த தொடர்வண்டியின் பாதை சுமார் 0.75 கிலோமீட்டர் ஆகும்.

இதில் செல்லும் ஆசை உடனே குழந்தைகள்  வந்தார்கள்..ஆனால் சீரமைப்புப் பணிகள் காரணமாக நாங்கள் சென்ற போது  இந்த வண்டி  இயங்கவில்லை .

















மலர் கண்காட்சி

 1978 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புதுவையில்  மலர் கண்காட்சி நடைபெறுகிறது.  இந்த மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களில் பல வண்ண செடிகளும் மர வகைகளும் பார்வைக்கு வைக்கப்படும் . பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சி புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் நடத்தப்படுகிறது .











சில இடங்கள் நல்ல பராமரிப்பிலும் , சில இடங்கள் கவனிப்பு அற்றும் உள்ளன.

குழந்தைகள் விளையாட நல்ல இடம் தான், ஆனால் இன்னும் பராமரிப்பு கொடுத்தால் ......இன்னும் அழகில் மிளிரும் .


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்



5 comments:

  1. படங்களும் செய்திகளும் அருமை.

    //இதில் செல்லும் ஆசை உடனே குழந்தைகள் வந்தார்கள்..ஆனால் சீரமைப்புப் பணிகள் காரணமாக நாங்கள் சென்ற போது இந்த வண்டி இயங்கவில்லை//

    குழந்தைகளுக்கு மிகுந்த ஏமாற்றமாய் இருக்கும் தான்.

    ReplyDelete
  2. படங்கள் அருமை

    ReplyDelete
  3. அழகான காட்சிகள்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. கடந்த இரு வருடங்களாக புதுச்சேரி சென்றிருந்தபோதெல்லாம் இப்பூங்காவுக்கு செல்ல நினைத்திருந்தேன். ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களால் வாய்ப்பு தவறிப்போய்விட்டது. அடுத்தமுறையாவது அவசியம் சென்றுவரவேண்டும். படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete