வாழ்க வளமுடன்
புதுச்சேரி தாவரவியல் பூங்கா - புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் இங்கு செல்லலாம்.
புதுவை பழைய பேருந்து நிலையம் மற்றும் அன்ன சதுக்கத்தில் இருந்து சில நிமிட நடை பயணத்திலும் இங்கு செல்லலாம் .
இந்த தாவரவியல் பூங்கா- இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது . இதன் பரப்பளவு 22 ஏக்கர் ஆகும்.
இந்த பூங்கா கலோனியல் பூங்கா என்றும் முன்பு அழைக்கபட்டது . 1826 ஆம் ஆண்டு தலைசிறந்த தாவரவியலாளர் பெரோட்டேட் (C.S.PERROTET), பல அரிய மற்றும் முக்கிய தாவரங்களை கொல்கத்தா ,சென்னை , இலங்கை மற்றும் ரீயூனியன் தீவு ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வந்து இப்பூங்காவை நிறுவினார் .
இங்கு 1500 தாவரவகைளுக்கும் மேல் உள்ளன.
1960 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசிடம் இருந்து புதுவை முழு அதிகாரம் பெற்ற பிறகு மாநில தோட்டகலை நிர்வாகத்தின் கீழ் இந்த பூங்கா கொண்டுவரப்பட்டது.
இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்களுக்கு பெயர் பலகை உண்டு.
அதில் அந்த மரங்களின்-
தாவரவியல் பெயர்
பொது பெயர்
தமிழ் பெயர்
தாவரத்தின் குடும்ப பெயர் என அனைத்து குறிப்புகளும் உள்ளன.
இப்படங்கள் எல்லாம் அந்த பூங்காவின் உள்ளே உள்ள சுவற்றில் வரையப்பட்டு இருந்தன .
தொடரும்.....
அனுபிரேம்
சுவர்கள் முழுவதும் அழகழகான ஓவியங்கள்! இந்தியாவின் தலை சிறந்த பூங்காக்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றி!
ReplyDeleteநல்ல படங்களுடன் நல்லதொரு பதிவு.
ReplyDeleteகுழந்தைகளை கவர் அவர்கள் பார்க்கும் கதைகளின் கதாபாத்திரங்கள் படங்கள் எல்லா இடங்களிலும்.
ReplyDeleteஅருமையாக இருக்கிறது.
குழந்தைகளை கவர்ந்தால் அடிக்கடி வருவாங்கன்னு நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க.
ReplyDeleteபடங்கள் அருமை
தாவரங்கள் படம் எதுவும் காணோமே... இனி வருமா?
ReplyDeleteஅழகான படங்கள்.
ReplyDeleteசென்ற மே மாதம் பாண்டிச்சேரி சென்ற போது இப்பூங்கா வழியே சென்றாலும் உள்ளே செல்லவில்லை!
படங்கள் அழகாக இருக்கின்றன. தகவல்களும் அருமை.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: அனு நான்போயிறுக்கிறேன் இப்பூங்கா. அங்கு டாய் ட்ரெயின் இருந்ததா?
படங்கள் அருமை
ReplyDelete