வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
புதுச்சேரி தாவரவியல் பூங்கா 1
புதுச்சேரி தாவரவியல் பூங்கா 2
மீன் அருங்காட்சியகம் இதுவும் புதுச்சேரி தாவரவியல் பூங்காவின் உள்ளேயே அமைந்துள்ளது . அங்கு எடுத்த படங்களின் தொகுப்பு இன்று ....
இதற்கு நுழைவு கட்டணமும் உண்டு. மிக சிறிய அளவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் இது. பராமரிப்பும் , பார்வைக்கு வைத்துள்ள மீன்கள் வகைகளும் நன்றே ...குழந்தைகள் கண்டு மகிழ ஏதுவான இடம் .
தொடரும் ...
அன்புடன்,
அனுபிரேம்
அழகான படங்கள். இவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால் மனதில் ஒரு அமைதி கிடைக்கும். என்னதான் நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தாலும், அவை எந்தக் கவலையுமின்றி சுதந்திரமாக நீந்துவதைப் பார்க்க ஒரு மகிழ்ச்சி. ஆனால் மனதின் ஓர் ஓரத்தில் இயற்கையான சுதந்திரம் அவற்றுக்கு இல்லையே என்ற கஷ்டமும். நண்பர் வீட்டில் வளர்க்கிறார்கள். அதனை பராமரிப்பது கடினமான வேலை.
ReplyDeleteஅவைகள் கூண்டுக்குள் இருப்பதை எண்ணினால் வருத்தமாக தான் இருக்கும் ....
Deleteஆனாலும் அவை அங்கும் அழகா நீந்தி கொண்டு இருக்கும் அழகை காணும் போது மனதிற்கு ஒரு உற்சாகம் வருவது இயற்கை தானே ...
நன்றி சகோ விரிவான கருத்திற்கு ..
அழகான படங்கள். காணொளியில் ஆமையார் நீந்துவதை பார்க்க அழகா இருக்கு.
ReplyDeleteநன்றி அம்மு
Deleteகுழந்தைகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் பிடிக்கும்.
ReplyDeleteவெளி நாடு போன போது மீன் அருங்காட்சியகம் போய் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறேன், உங்கள் பகிர்வை பார்த்தபின் நானும் போட ஆசை வந்து விட்டது.
சீக்கிரம் நீங்களும் பகிருங்கள் அம்மா...வெளி நாட்டில் இன்னும் பராமரிப்பு சிறப்பாகவே இருக்கும் ...அப்படங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ..
Deleteபடங்கள், காணொளி பாரதி பாடல் அனைத்தும் அருமை.
ReplyDeleteநன்றி மா
Deleteபார்க்கவே பரவசமாய் இருக்கு.
ReplyDeleteஆமாம் ராஜிக்கா அங்கு பார்க்கும் போது நாங்களும் குழந்தைகள் போன்ற உற்சாகத்துடனே ரசித்தோம் ..
Deleteகாட்சிகள் ரசிக்கத்தக்கவையாய் இருந்திருக்கும். நன்றி.
ReplyDeleteரசனையான படங்களின் தொகுப்பு. என்றைக்குமே அலுக்காத காட்சிகள்.
ReplyDeleteமீன் வளர்ப்பு என்பது மிக மிகக் கடினமான விஷயம். எங்கள் வீட்டிலும் கூட ஆசை இருந்தது ஆனால் முடியவில்லை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteதுளசிதரன்
ஹையோ அனு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் விரலை அந்தக் கண்ணாடியில் வைத்துப் பார்த்திருக்கீங்களா? விரல் நுனியைக் கண்ணாடியில் வைத்தால் மீன் வந்து அந்த விரலை தன் வாயால் முட்டி முட்டிச் செல்லும். உள்ளே. அழகாக இருக்கும். நான் யார் வீட்டில் பார்த்தாலும் ரசித்துப் பார்ப்பேன். அதில் நீர் மாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான வேலை அவை இறந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சூப்பர் படங்கள் அனு...
ஆமை அழகாக நீந்துகிறார். நானும் மகனும் மழையில் வீட்டிற்குள் வந்துவிடும் ஆமைகளையும், ரோட்டில் அடிபட்டு உயிருடன் இருக்கும் ஆமைகளையும் வீட்டிற்கு எடுத்து வந்து அப்புறம் கிண்டி பார்க்கில் கொண்டு கொடுத்துவிடுவோம். பெரும்பாலும் குளத்தாமைகள் அதான்..
கீதா