06 April 2023

பங்குனி உத்திரம் - நம்பெருமாள், ஶ்ரீ ரங்கநாயகித் தாயார் சேர்த்தி ...

நம்பெருமாள் சேர்த்தி மண்டபம் சேருதல்






ஶ்ரீரங்கநாச்சியார்  சேர்த்தி மண்டபம் சேருதல்...



 பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)


பங்கயப் பூவிற் பிறந்த பாவை நல்லாள் வாழியே

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே 

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே 

மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே 

எங்கள்  எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே 

இருபத் தஞ்சுட்பொருள் மால் இயம்புமவள் வாழியே 

செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே 

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே 





பங்குனி உத்திரம்...


பிராட்டியாரோடு சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள். 

எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை, அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு.

 இந்த நாள் ஒரு இனிய நாள்..! 
பரிவு பொங்கும் பெருநாள்..!
 கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..! 

இதனை நன்கறிந்தவர் உடையவர். இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கும், அவர் அடியார்களாகிய நம் அனைவருக்கும் பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார். 

இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது. 

கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும், தம்மை தரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும், வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம்.
















சேர்த்தி திருமஞ்சனம் -


தாயார் சந்நிதி சேர்த்தி மண்டபத்தில் பகல் 2  மணி முதல், இரவு 11 மணி வரை பெரியபிராட்டியுடன் சேர்த்தி உற்சவம். 

இரவு 11 மணிக்கு கத்ய த்ரயம் சேவிப்பார்கள். அது முடிந்ததும் 12 மணிக்கு உடையவர் சந்நிதியில் சாற்றுமுறை, தீர்த்தம், முதலியாண்டான், பிரசாதம்.

12 மணிக்கு மேல் அதிகாலை வரை   நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் 18 முறை திருமஞ்சனம் நடைபெறும்.(உடையவர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை சென்றதைக் குறிக்கும் வண்ணம்).
அதன்பின் பிராட்டி தாயார் சந்நிதிக்கு எழுந்தருள்வார். 







நம்பெருமாள் பங்குனி திருவிழா,
ஆதி பிரம்மோத்ஸவம்  பத்தாம் திருநாள் நாள் அதிகாலை 
ஶ்ரீரங்கநாச்சியார் உடன் நம்பெருமாள் நிறைவு சேவை 
திருமஞ்சனம் முடிந்து...








 முக நூலில் இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


பெருமாள் திருமொழி 
3. மெய் இல் வாழ்க்கையை
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் 

 உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்

மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*

அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*

உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே 4

671



தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*

நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*

ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 

பேதை மா மணவாளன்*  தன் பித்தனே  5

672


எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*

உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதிலன்*

தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*

எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே 6

673



நம்பெருமாள்  திருவடிகளே சரணம் !!

ஶ்ரீரங்கநாச்சியார்   திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம் 💞💞💞

1 comment:

  1. நேற்று ஶ்ரீரங்கத்தில் இருந்திருக்கலாமே (அதாவது அதற்கு முந்தைய தினம்) என்று நினைக்கவைத்தது. ஶ்ரீரங்கத்தில் எப்படி கத்யத்ரயம் சேவிக்கிறார்கள் எனக் கேட்க ஆவல்

    ReplyDelete