25 April 2023

சுவாமி இராமானுஜர்

எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1006 ஆவது திருநட்சத்திரம் இன்று -- சித்திரை திருவாதிரை--

ஸ்ரீபெரும்புதூர் ஸ்வாமி ஸ்ரீ  ராமானுஜர் திருஅவதார திருநாள் புறப்பாடு....






ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே









இராமானுஜ நூற்றந்தாதி


4.

என்னைப்  புவியில்  ஒருபொருள் ஆக்கி*  மருள் சுரந்த- 

முன்னைப்  பழவினை  வேர் அறுத்து*  ஊழி முதல்வனையே- 

பன்னப் பணித்த இராமானுசன்*  பரன் பாதமும் என்-

சென்னித் தரிக்க வைத்தான்*  எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.

2794


   5

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று*  இசையகில்லா- 

மனக் குற்ற மாந்தர்*  பழிக்கில் புகழ்*  அவன் மன்னிய சீர்- 

தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா* 

இனக் குற்றம் காணகில்லார்,*  பத்தி ஏய்ந்த இயல் இது என்றே.  

2795


   

   6

இயலும் பொருளும் இசையத் தொடுத்து,*  ஈன் கவிகள் அன்பால்-

மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,*  மதி இன்மையால்- 

பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்* 

முயல்கின்றனன்*  அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.

2796








உபதேசரத்தினமாலை


27.   

இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்

என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்

சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்

நாற்றிசையும் கொண்டாடும் நாள்


28.   

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்

வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்

உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்

செய்ய திருவாதிரை


29.   

எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா

வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே

ஒருவாமல் எப்பொழுதும் ஓர்








முந்தைய பதிவுகள்...

மேல்கோட்டை ஸ்வாமி ராமானுஜர் தரிசனம் (2023)     





உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖

No comments:

Post a Comment